SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

முதலீடுகளை ஈர்க்கும் விதிகள்!

2018-07-16@ 10:10:14

நன்றி குங்குமம் முத்தாரம்

ஸ்டார்ட் அப் மந்திரம் 4

1. ஆர்வமுள்ளவர்களை துணை நிறுவனர்களாக சேர்ப்பது மிக அவசியம். ஸ்டார்ட்அப்பை முடிவு செய்தால் ஆழமான மார்க்கெட் ஆய்வுக்குப் பிறகு களத்தில் இறங்குங்கள்.

2. மக்களின் தினசரி பிரச்னைகளை தீர்க்க உதவாத ஸ்டார்ட்அப் ஐடியா பிக்அப் ஆகாது.

3. ஐடியா ஸ்டார்ட்அப்பில் இருக்கும் அதே நிலையில் இருக்கவேண்டிய அவசியமில்லை. நமக்கு பரிணாம வளர்ச்சி உள்ளது போலவே, ஐடியாவையும் தொடர்ச்சியாக மேம்படுத்துங்கள். எ.கா: பேபால்.  

4. ஸ்டார்ட்அப் ஐடியாவை பிடித்திருக்கிறது என்று கூறி உற்சாகப் படுத்துபவர்கள் அதனை பயன்படுத்த எந்த கேரண்டியும் இல்லை. வாடிக்கையாளர்களிடம் நீங்களே ஸ்டார்ட்அப் பற்றி பேசலாம். முதலீட்டாளர்களும் பயனர்களும் ஏறத்தாழ ஒன்றுதான். எனவே முடிந்தவரை நேரில் சந்தித்து அல்லது போனில் பேசுங்கள்.

5. செலவழிப்பது முதலீட்டாளர்கள் பணம் என்பதால் கவனமாக செலவழியுங்கள். உங்கள் வளர்ச்சி வேறு, ஸ்டார்ட்அப் நிறுவன வளர்ச்சி வேறு, புரிந்துகொள்வது நல்லது.   

6. ஸ்டார்ட்அப் உருவாகும் நிலையில் பத்திரிகை செய்தி, விளம்பரங்கள், நிதி முதலீடு உங்கள் கவனத்தை சிதைக்க வாய்ப்புள்ளது. முழு கவனமும் தொழில் முயற்சியில் இருந்தால் மட்டுமே ஸ்டார்ட்அப்பை வின்னிங் இன்னிங்ஸாக்க முடியும்.

குஜராத்தைச் சேர்ந்த Saathi eco எனும் ஸ்டார்ட்அப், குளோபல் க்ளீன்டெக் விருதை(2018) வென்றிருக்கிறது. எப்படி சாதித்தது? சானிடரி பேடுகளை தயாரிக்கிற நிறுவனம்தான். இதில் புதுமை வாழை நாரில் அதனை தயாரித்ததுதான். பாகிஸ்தான், மொராக்கோ, தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளை வென்று சாதி இகோ சாதித்திருக்கிறது. காரணம், சூழலுக்குத் தகுந்தபடி ஐடியாவை நுட்பமாக மாற்றியதுதான்.
 
இந்த ஸ்டார்ட்அப் முயற்சி யோடு, Navalt & boats (கொச்சின்), aspartika (பெங்களூரு) ஆகியவை இப்போட்டியில் வென்றுள்ளன. லாஸ்ஏஞ்சல்ஸைச் சேர்ந்த க்ளீன்டெக் நிறுவனத்துடன் இணைந்து  ஐக்கிய நாடுகளின் தொழில்மேம்பாட்டு சங்கம் (UNIDO) இப்போட்டியை நடத்தியது. என்ன பயன்கள் கிடைக்கும்? ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு நிதியுதவி, முதலீட்டாளர்கள் சந்திப்பு, பயிற்சி ஆகியவை வெற்றி பெற்ற நிறுவனங்களுக்கு
பம்பர் பரிசு!

நீங்கள் வாசிக்கவேண்டிய நூல்: The Everything Store Brad Stone இந்நூலில் ஜெஃப் பெஸோஸ் தன் வேலையைக் கைவிட்டு நூல்களை ஆன்லைனில் விற்று இன்று அமேஸானை மாபெரும் நிறுவனமாக வளர்தெடுத்ததை ஆசிரியர் விளக்கியுள்ளார்.

(உச்சரிப்போம்)

கா.சி.வின்சென்ட்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • gggooooverrr

  அமெரிக்காவில் கவர்னர் பதவிக்கான போட்டிக் களத்தில் திருநங்கை - தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் திருநங்கை கவர்னர்

 • affffgaaaaa

  ஆப்கானிஸ்தானில் பள்ளியில் தற்கொலைப்படைத் தாக்குதல் - 48 பள்ளி மாணவர்கள் உயிரிழப்பு

 • iiiiiiiiiiitaaalyyy

  இத்தாலியில் நெடுஞ்சாலைப் பாலம் இடிந்து விழுந்து விபத்து - 39 பேர் பலி

 • keeeraaalaaaa

  கேரளாவில் கனமழை - வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 70ஆக உயர்வு 14 மாவட்டங்களிலும் 'ரெட்' அலர்ட்

 • buildingggggg1234

  சுதந்திர தின விழா - நாடு முழுவதும் அரசு கட்டிடங்கள் மூவண்ண நிறங்களில் ஜொலித்தது

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்