SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

புதிய வால்வோ எக்ஸ்சி40 கார் அறிமுகம்

2018-07-15@ 00:22:57

வால்வோ நிறுவனத்தின் சிறிய ரக எஸ்யூவி (ஸ்போர்ட்ஸ் யுடிலிட்டி வெகிக்கிள்) மாடலாக வால்வோ எக்ஸ்சி40 கார் உருவாக்கப்பட்டு இருக்கிறது. வால்வோ நிறுவனத்தின் காம்பேக்ட் மோடுலர் ஆர்க்கிடெக்ச்சர் என்ற புதிய  வடிவமைப்பு கொள்கையின் கீழ் இந்த கார் தயாரிக்கப்பட்டு இருக்கிறது.வால்வோ நிறுவனத்தின் பாரம்பரிய டிசைன் தாத்பரியங்களுடன் மிக அழகிய மாடலாக இது உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்த காரில் சுத்தியல் போன்ற எல்இடி பகல்நேர விளக்குகள் உள்ளன. இது, வால்வோ வாரிசு என்பதை  எளிதாக காட்டுகிறது. 18 அங்குல அலாய் வீல், பூமராங் வடிவிலான டெயில் லைட் கிளஸ்ட்டர் ஆகியவை வால்வோவின் முத்தாய்ப்பான டிசைன் அம்சங்களை பிரதிபலிக்கிறது.  வால்வோ எக்ஸ்சி60 மற்றும் எக்ஸ்சி90 ஆகிய  மாடல்களில் இடம்பெற்றிருக்கும் அதே 9.0 அங்குல திரையுடன்கூடிய சென்சஸ் இன்போடெயின்மென்ட் சிஸ்டம் இந்த காரிலும் கொடுக்கப்பட்டு இருக்கிறது. ஆன்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் பிளே செயலிகளை இந்த  சாதனம் சப்போர்ட் செய்யும்.

இப்புதிய சொகுசு காரில் 2.0 லிட்டர் டீசல் இன்ஜின் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 187 பிஎச்பி பவரையும், 400 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன்  வாய்ந்தது. 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது.  வெள்ளை, சிவப்பு மற்றும் நீலம் ஆகிய வண்ணங்களில் கிடைக்கும். கருப்பு- சிவப்பு மற்றும் முழுவதுமான கருப்பு ஆகிய 2 இன்டீரியர் வண்ணங்களை தேர்வுசெய்து கொள்ளலாம்.  இந்தியாவில் டீசல் இன்ஜினுடன் அனைத்து வசதிகளுடன்கூடிய R-Design என்ற ஒரே வேரியண்ட்டில் மட்டுமே விற்பனைக்கு கிடைக்கும். மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்ஏ, ஆடி க்யூ3 மற்றும் பிஎம்டபிள்யூ எக்ஸ்-1 ஆகிய ஆரம்ப  ரக சொகுசு எஸ்யூவி கார்களுடன் நேரடியாக போட்டி போடும். விலை விவரம் அறிவிக்கப்படவில்லை.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • chennai_pkankatchui1

  சென்னை போட்டோ பியானாலேவின் 2வது புகைப்பட கண்காட்சி!!

 • israelmoonshuttle

  சந்திரனில் ஆய்வு நடத்த வெற்றிகரமாக விண்கலம் அனுப்பி இஸ்ரேல் சாதனை

 • chennai_laksh1

  திருவேங்கடமுடையான் வெங்கடேச பெருமாள் கோயிலில் ஆண்டாளுக்கு லட்சார்ச்சனை விழா

 • chinadance

  சீனாவில் லூஸெங் எனப்படும் இசைக்கருவியை கொண்டாடும் விதமாக மியோவா மக்கள் நடத்திய பாரம்பரிய நடனம்

 • Autoshow2019

  கனடாவில் சர்வதேச ஆட்டோ ஷோ 2019: முன்னணி நிறுவனங்களின் கிளாசிக் கார்கள் பங்கேற்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்