SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

உறைத்தால்சரி

2018-07-15@ 00:13:52

பேனர்கள், டிஜிட்டல் போர்டுகள் கலாச்சாரம் காண்போரை மிரள வைக்கும் அளவுக்கும், பொதுமக்களுக்கு இடையூறு செய்யும் வகையிலும் சென்று கொண்டிருக்கிறது. கட்சி நிகழ்ச்சிகள், திருமணங்கள் என்றால், சாலை களின் நடுவில் உள்ள மின் கம்பங்களில் சிறிய அளவிலான பேனர்கள் ஒரு கி.மீ. முதல் 2 கி.மீ. தொலைவு வரையில் வைக்கின்றனர். சாலைகளின் நடைபாதையை அடைத்துக் கொண்டும் பேனர்கள் வைக்கப்படுகின்றன.
பொதுமக்களுக்கு இடையூறாக வைக்கப்படும் பேனர்களை அகற்ற வேண்டும் என்று அவ்வப்போது பொதுநலன் வழக்குகளில் நீதிமன்றங்கள் உத்தரவு பிறப்பித்தபோதிலும் அவை மதிக்கப்படுவதே இல்லை. விளம்பர பேனர்கள் வைப்பதற்கு உரிய துறைகளின் முன்அனுமதி பெறப்படுகிறதா என்றால் அதுவும் இல்லை. ஏனெனில் ஆளுங்கட்சி என்பதால் அதிகாரிகளும் நமக்கு ஏன் வம்பு என்ற ரீதியில் கண்டும் காணாமல் இருந்துவிடுகின்றனர்.

அப்படியே கெடுபிடி கொடுத்தால் அந்த அதிகாரிக்கு ஆளுங்கட்சியில் இருந்து கொடுக்கப்படும் நெருக்கடியால் பிரச்னை நமக்கு ஏன்? என்று ஒதுங்கிக் கொள்ளும் நிலையே நிலவுகிறது. ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பார்கள். சமீபத்தில் விளம்பர பேனர் தொடர்பான வழக்கை விசாரித்த நீதிமன்றம், உத்தரவை செயல்படுத்த அதிகாரிகளுக்கு எண்ணமில்லையா? பல உத்தரவுகள் காகித அளவிலேயே உள்ளன. அரசு நடவடிக்கை எடுத்ததாக நீதிமன்றத்தில் தெரிவித்தாலும், அதன்பின்னர் அந்த இடத்திற்கு சென்று பார்த்தாலும் மீண்டும் அதே நிலையில்தான் உள்ளது. நீதிமன்ற வளாகத்தை சுற்றியே பேனர்கள் வைக்கப்பட்டுள்ளது. நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த முடியவில்லை என்றால் கூறுங்கள். எப்படி அமல்படுத்த வேண்டும் என்று நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என்று கடுமையாக எச்சரித்துள்ளனர்.

பொதுமக்களுக்கு இடையூறாக பேனர்கள் வைக்க எப்போதும் யாருக்கும் அனுமதி தரக் கூடாது. பேனர்களை கண்டுக்கொள்ளாத அதிகாரிகள் மீது துறைரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தொடர்பான வழக்குகளை நீதிமன்றங்கள் விரைந்து விசாரித்து தவறு செய்தவர்களை கடுமையாக தண்டிக்க வேண்டும். ஜாமீன், முன்ஜாமீன் தராமல் சிறையில் அடைக்க வேண்டும். அப்போதுதான் விதிமீறல்கள் குறையும். இந்த விவகாரத்தில் நீதிமன்றம் தெரிவித்த கடுமையான விமர்சனத்தை கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியத்திலும் அவசியமான ஒன்று. இது அதிகாரிகளுக்கு உறைத்தால் சரி.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 18-10-2018

  18-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்

 • thaneerrr_kaari

  தொடரும் தண்ணீர் லாரி உரிமையாளர்களின் வேலை நிறுத்தம் : சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு அபாயம்

 • gold_navaratchri11

  நவராத்திரி பிரம்மோற்சவ விழாவை முன்னட்டு திருப்பதியில் தங்க தேரோட்டம்

 • balore_arrrres1

  சட்டவிரோதமாக இந்தியாவிற்குள் நுழைந்த வங்காளதேசத்தை சேர்ந்த 31 பேர் அதிரடியாக கைது

 • gasa_vanvali111

  காசாவில் இஸ்ரேல் கடற்படையினர் துப்பாக்கிச்சூடு : 32 பாலஸ்தீனர்கள் பரிதாபமாக பலி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்