SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மலை ரயிலை பாரம்பரிய சின்னமாக அறிவித்து 13 ஆண்டுகள் நிறைவு

2018-07-14@ 12:44:13

ஊட்டி : நீலகிரி மலை ரயில் பாரம்பரிய மலை ரயிலாக (உலக பாரம்பரிய சின்னம் புத்தகத்தில் இடம்)  அறிவிக்கப்பட்டு 13 ஆண்டுகள் நிறைவு பெறுகிறது.  மேட்டுப்பாளையத்தில் இருந்து கடந்த 100 ஆண்டுகளுக்கு முன் மலையை குடைந்து ரயில் பாதை அமைக்கப்பட்டது. 100 ஆண்டுகளுக்கு  மேலாக மலை பாதையில் சிறிய ரக ரயில் இயக்கப்பட்டு வருகிறது. உலகம் முழுவதும் உள்ள நாடுகளில் நீராவி இன்ஜின்கள் காணாமல் போய் பல ஆண்டுகள் ஆகிய நிலையில், தற்போது டீசல் மற்றும் மின்சாரத்தில் ரயில்கள் இயங்கும் அதி வேக ரயில்கள் கண்டு பிடிக்கப்பட்டு இயக்கப்பட்டு வருகிறது.

எனினும், ஒரு சில இடங்களில் மட்டும் இன்று வரை நீராவி இன்ஜின் பொருத்திய ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்தியாவில் டார்ஜலிங், நீலகிரி போன்ற பகுதிகளில் இந்த ரயில்கள் இயக்கப்பட்டு வருகினறன. மேட்டுப்பாளையம் முதல் குன்னூர் வரையில் தற்போது நீராவி இன்ஜின்களே இயக்கப்பட்டு வருகிறது.

இதனால், இதனை பாரம்பரிய சின்னமாக அறிவிக்க வேண்டும் என சுற்றுலா ஆர்வலர்கள், நீலகிரி மலை ரயில் பாதுகாப்பு அறக்கட்டளை ஆகியவை வலியுறுத்தி வந்தன. இந்நிலையில், கடந்த 2005ம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவில், டர்பன் நகரில் நடந்த உலக பாரம்பரிய சங்கத்தின் 29வது கூட்டத்தில் நீலகிரி மலை ரயிலுக்கு பாரம்பரிய சின்னம் அந்தஸ்து வழங்கப்பட்டது. 2005ம் ஆண்டு ஜுலை மாதம் 15ம் தேதி இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.

அன்று முதல் நீலகிரி மலை ரயில் பாரம்பரிய சின்னமாக மாறியது. பாரம்பரிய ரயிலாக அறிவிக்கப்பட்டு நாளையுடன் 13 ஆண்டுகள் நிறைவு பெறுகிறது. இதனை கொண்டாட பாரம்பரிய மலை ரயில் அறக்கட்டளை சங்கம் முடிவு செய்துள்ளது. மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு வரும் ரயில் பயணிகளுக்கு இனிப்புக்கள் வழங்கியும், மாலை அணிவித்தும் கவரவிக்க நடவடிக்கைகள் மேற்க்கொள்ளப்பட்டு வருகிறது.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • YosemityNationalPark

    கலிபோர்னியாவின் யோசெமிட்டி தேசியப் பூங்கா அருகே பயங்கர காட்டுத்தீ: சுமார் 9,300 ஏக்கர் நிலம் நாசம்!

  • madhyapradeshrain

    மத்தியப்பிரதேசத்தில் பல்வேறு இடங்களில் கனமழை : பொதுமக்கள் கடுமையாக பாதிப்பு

  • nanteswarcowmarriage

    நந்தேஸ்வரில் மழை பெய்ய வேண்டி மாடுகளுக்கு திருமணம் செய்யும் வினோத வழிபாடு

  • LavaBombHawaii

    ஹவாய் தீவில் பறந்து வந்து வெடித்த எரிமலை குழம்பு மற்றும் பாறைகள்: 23 பேருக்கு தீக்காயம்!

  • Croatiaplayersreception

    குரோஷியா கால்பந்து வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்