SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பந்தலூர், மஞ்சூரில் விடிய,விடிய மழை குடியிருப்பு பகுதிகளில் நிலச்சரிவு அபாயம்

2018-07-14@ 12:38:28

பந்தலூர் : பந்தலூர் சுற்று வட்டாரப்பகுதிகளில் கனமழை பெய்து வருவதன் காரணமாக குடியுருப்பு பகுதிகளில் நிலச்சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளது.  பந்தலூர் பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும்  பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் குடியிருப்பு பகுதியில் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. பந்தலூர் அருகே வாளவயல் பகுதியில் கனமழைக்கு குமாரவேல் என்பவரின் வீடு அருகே மண்சரிவு ஏற்பட்டுள்ளது.


தொடர்மழை நீடித்தால் வீடு முற்றிலும் பாதிக்கும் நிலையில் உள்ளது.மண்சரிவு ஏற்பட்ட இடத்தில் நெல்லியாளம் நகராட்சி மூலம் தடுப்பு சுவர் கட்டித்தர வேண்டுமென பாதிக்கப்பட்டவர் கோரிக்கை விடுத்தனர்.


மஞ்சூர்:  நேற்று முன் தினம் இரவு மஞ்சூர் அருகே உள்ள எமரால்டு இந்திராநகர் பகுதியில் விடிய, விடிய பலத்த மழை பெய்தது.  இந்த மழையில் அப்பகுதியை சேர்ந்த அருணாச்சலம், காளிமுத்து மற்றும் கோவிந்தம்மாள் ஆகியோரின் வீடுகளின் பக்கவாட்டு சுவர்கள் இடிந்து விழுந்தது. இதுகுறித்த தகவலின் பேரில் குந்தா தாசில்தார் ஆனந்தி மற்றும் வருவாய்துறையினர் இந்திராநகர் பகுதிக்கு சென்று மழையால் இடிந்த வீடுகளை பார்வையிட்டனர்.


தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறிய அதிகாரிகள் நிவாரண உதவி வழங்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர்.  இதேபோல் எடக்காடு ,கிண்ணக் கொரை, கோரகுந்தா, அப்பர்பவானி, அவலாஞ்சி பகுதிகளில் ஏராளமான மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்துள்ளது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 24-02-2019

    24-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 23-02-2019

    23-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • chennai_pkankatchui1

    சென்னை போட்டோ பியானாலேவின் 2வது புகைப்பட கண்காட்சி!!

  • israelmoonshuttle

    சந்திரனில் ஆய்வு நடத்த வெற்றிகரமாக விண்கலம் அனுப்பி இஸ்ரேல் சாதனை

  • chennai_laksh1

    திருவேங்கடமுடையான் வெங்கடேச பெருமாள் கோயிலில் ஆண்டாளுக்கு லட்சார்ச்சனை விழா

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்