SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளதையொட்டி திருப்பதியில் தரிசனத்துக்கு 9 நாள் தடை: தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் தகவல்

2018-07-14@ 12:17:29

திருப்பதி: திருப்பதி கோயிலில் ஆகஸ்ட் 9 முதல் 17-ம் தேதி வரை தரிசனத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 12-முதல் 16 வரை கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளதால் தரிசனம் நிறுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 17-ம் தேதி மாலை ஆறு மணிக்கு பிறகே திருமலை செல்ல அனுமதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் புட்டா சுதாகர் யாதவ் கூறியுள்ளார். முதல் முறையாக திருப்பதியில் கும்பாபிஷேகத்தின் போது பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 12 ஆண்டுக்கு ஒருமுறை மகா சம்ப்ரோக்ஷணம் (கும்பாபிசேகம்) நடத்தப்படுவது வழக்கம். திருமலை-திருப்பதி தேவஸ்தானம் ஏற்பட்ட பிறகு 1958, 1970, 1982, 1994, 2006ம் ஆண்டு சம்ப்ரோக்‌ஷணம் நடைபெற்றது.கடந்த காலங்களில் நடந்த சம்ப்ரோக்க்ஷத்தின்போது பக்தர்களின் வருகை குறைவாக இருந்தது. ஆனால் தற்போது பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. சாதாரண நாட்களில் சுமார் 50 ஆயிரம் பேரும், வார விடுமுறை விடுமுறை நாட்களில் 70 முதல் 1 லட்சத்துக்கு மேற்பட்ட பக்தர்களும் சுவாமி தரிசனம் செய்ய வருகின்றனர்.

இந்நிலையில் வரும் ஆகஸ்ட் 16ம்தேதி திருப்பதி ஏழுமலையான் கோயில் சம்ப்ரோக்ஷணம் நடைபெற உள்ளது. விழாவையொட்டி ஆக.12ம்தேதி முதல் 16ம்தேதி வரை 5 நாட்களும் 150 ரித்விக்குகள், வேத பண்டிதர்கள் தொடர்ந்து யாகபூஜைகளை மேற்கொள்ள உள்ளனர். இதனால் திருப்பதி கோயிலில் ஆகஸ்ட் 9 முதல் 17-ம் தேதி வரை தரிசனத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 20-02-2019

    20-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • mallakamb_mumbai

    மும்பையில் நடைபெற்ற சர்வதேச மல்லகம்ப் போட்டி :மரக் கம்பத்திலும் கயிற்றிலும் ஜிம்னாஸ்டிக் செய்து வீரர்கள் அசத்தல்

  • varanasi_modi123

    டீசல் டூ மின்சார இன்ஜினுக்கு மாற்றப்பட்ட உலகின் முதல் ரயிலை பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார்

  • china_lamfesti1

    சீனாவில் விளக்குத் திருவிழா : டிராகன், பீனிக்ஸ், பன்றிகளை போல் உருவாக்கப்பட்ட விளக்குகள் காண்போரை கவர்ந்தது

  • 2mili_nall

    காஷ்மீரில் வீரமரணம் அடைந்த மேஜர் விஎஸ் தவுன்டியால், காவலர் அப்துல் ரஷித் உடல்கள் ராணுவ மரியாதையுடன் நல்லடக்கம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்