SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

கழிப்பறை கட்டும் பணி பாதியில் நிற்கும் அவலம்

2018-07-14@ 12:15:51

* விரைந்து முடிக்க வலியுறுத்தல்

கீழக்கரை : கீழக்கரை 3வது வார்டு 21 குச்சி மீனவர் குப்பத்தில் கடந்த 4 வருடங்களுக்கு முன் கட்டப்பட்டு பாதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள கழிப்பறையாலும், அதன் அருகில் தோண்டி வைக்கப்பட்டுள்ள பள்ளத்தினாலும் பொது மக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.

கீழக்கரையில் 3வது வார்டு 21 குச்சி என்ற மீனவர் குப்பத்தில் 300க்கும் மேற்பட்ட மீனவ குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு நகராட்சியால் இப்பகுதியில் உள்ள மயானத்தில் ஆண்களுக்கான கழிப்பறை ரூ.9 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு பாதியில் நிறுத்தி வைத்துள்ளனர். மேலும் இந்த கட்டடத்தை கட்டுவதற்கு அதன் அருகிலேயே தோண்டப்பட்டு மணல் எடுத்து கட்டுமானத்திற்கு பயன்படுத்திவிட்டு அந்த பள்ளத்தையும் மூடாமல் அப்படியே விட்டுள்ளனர்.

இந்த பள்ளத்தில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை விழுந்து காயமடைந்து வருகின்றன். எனவே பாதியில் நிறுத்தியுள்ள கழிப்பறை கட்டும் பணியை நிறைவு செய்து, மக்கள் பயன்பாட்டிற்கு விரைவில் கொண்டு வரவும், அருகில் உள்ள பள்ளத்தை மூடுவதற்கும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்

மருத்துவம்

Medical Trends கைகளின் வலி
Like Us on Facebook Dinkaran Daily News
  • damagedvinayr_idoles00

    விநாயகர் சதுர்த்தியையடுத்து பல்வேறு பகுதிகளில் நீர் நிலைகளில் உடைந்து சிதறி கிடைக்கும் விநாயகர் சிலைகள் !

  • delhiaccid_childead

    டெல்லியில் கட்டடம் இடிந்து விபத்து : பெண் உட்பட 4 குழந்தைகள் பலி !

  • dogsketc_123amer

    பனிச்சறுக்கு விளையாடும் உலகின் முதல் நாய் : வியக்க வைத்த பென்னி !

  • thailandbirdsing

    தாய்லாந்தில் நடைபெற்ற பறவைகள் பாடும் போட்டி : ஆயிரக்கணக்கான பறவைகள் பங்கேற்பு

  • presimodhi_madhya123

    மத்தியப் பிரதேசத்தில் பாஜக நிர்வாகிகள் கூட்டம் : பிரதமர் மோடி, அமித்ஷா பங்கேற்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்