SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Satya Summer Offer

பரமக்குடி வாரச்சந்தை திடலில் உள்ள சமூக விரோதிகள் புகலிடமான மினி விளையாட்டு மைதானம்

2018-07-14@ 12:14:03

* மவுனம் காக்கும் விளையாட்டுத்துறை

பரமக்குடி : பரமக்குடி வாரச்சந்தை திடலில் அமைக்கப்பட்டுள்ள மினி விளையாட்டு மைதானம் பராமரிப்பின்றி சமூக விரோதிகளின் புழலிடமாக மாறி வருகிறது. தடுக்க வேண்டிய விளையாட்டுத்துறை அதிகாரிகள் கண்டு கொள்ளாமல் மவுனம் காத்துவருவதால், விளையாட்டு வீரர்கள் மிகுந்த அதிருப்தியில் உள்ளனர்.

பரமக்குடியில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளின் விளையாட்டு திறனை ஊக்கப்படுத்தும் வகையில், விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தால் ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் வாரச்சந்தை திடலில் மினி விளையாட்டு மைதானம் கடந்த 2007ம் ஆண்டு அமைக்கப்பட்டது. இதில் பொருள்கள் வைப்பதற்கு தனி அறைகளும், விளையாட்டு வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் ஓய்வு எடுப்பதற்கு தனித்தனி அறைகள் கட்டப்பட்டுள்ளது.

ஓட்டப்பந்தய களம், உயரம், நீளம் தாண்டுதல், கால்பந்து, ஹாக்கி உள்பட பல போட்டிகள் நடத்த வசதியாக மினி விளையாட்டு அரங்கம் கட்டப்பட்டது. பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவந்தால் பராமரிக்க முடியாமல் போய்விடும் என்பதற்காக சுற்றிலும் சுற்றுச்சுவர் எடுக்கப்பட்டு பாதுகாப்புடன் இருந்தது. தொடக்கத்தில் பாதுகாவலரை நியமித்து முறையாக பராமரிப்பு செய்த வந்தநிலையில், கடந்த 5 ஆண்டுகளாக பராமரிப்பின்றி வீரர்களின் அறைகளின் கீழ் தளம் சேதமடைந்து காணப்படுகிறது.

விளையாட்டு அரங்கின் உள்பகுதியில் வைக்கப்பட்டிருந்த மின் விளக்குகள் மர்ம நபர்களால் உடைத்து சேதபடுத்தப்பட்டுள்ளது. இதனால் இரவு முழுவதும் இருளில் முழ்கியநிலையில் உள்ளது. இதனால், மாதம்தோறும் நடைபெறும் தடகளப்போட்டிகள் முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது.

பரமக்குடி பகுதியிலுள்ள பல்லாயிரம் மாணவ, மாணவியர்களுக்குரிய பயிற்சி களமின்றி பள்ளி மற்றும் கல்லூரிகளின் விளையாட்டு திடல்களில் உபகரணங்கள், வழிகாட்டுதல் இல்லாமல் பயிற்சி பெற்றுவருகின்றனர். ராணுவம், போலீஸ் உள்பட பல வேலைகளுக்கு உடற்தகுதி தேர்வுக்கு செல்பவர்களுக்கு பயிற்சி மேற்கொள்ள போதுமான இடமின்றி தவித்து வருகின்றனர். விளையாட்டு அரங்கில் இருந்த கதவுகளும், விளையாட்டு உபகரணங்களும் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

பகல், இரவு என பார்க்காமல் சமூக வீரோதிகள் அறைகளை பாராக மாற்றி வைத்துள்ளனர். சந்தை பகுதியிலிருந்து பர்மா காலனி உள்ளிட்ட தெருக்களுக்கு செல்ல சுற்றுச்சுவர்களை சேதப்படுத்தி வழி உருவாக்கப்பட்டுள்ளது. இதனால் ஓட்டப்பந்தய தடங்கள் சிதைக்கப்பட்டுள்ளது. ஆகையால், மாவட்ட விளையாட்டுத்துறை அதிகாரிகள் மற்றும் மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுத்து மினி விளையாட்டு மைதானத்தை சீர்செய்து மாணவர்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என்பது சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


மேலும் செய்திகள்

Satya Summer Offer
Like Us on Facebook Dinkaran Daily News
  • mylai_kabal1

    பங்குனி உத்திர திருவிழா : மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் தேரோட்டம் கோலாகலம்

  • parade_eye1

    புனித பாட்ரிக் தினம் :காணுமிடமெல்லாம் பசுமையை குறிக்கும் பச்சைநிற ஆடையுடன் அணிவகுப்பு

  • newattack

    நியூசிலாந்து மசூதியில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் பரிதாபமாக 8 இந்தியர்கள் பலி

  • siva_muthu12

    காரைக்குடி முத்துமாரியம்மன் கோவில் திருவிழா! : ஏராளமான பக்தர்கள் பால்குடங்களுடன் ஊர்வலம்

  • manohar_cm12

    கோவா முதல்வர் மனோகர் பாரிக்கரின் உடலுக்கு அரசியல் பிரமுகர்கள், பொதுமக்கள் அஞ்சலி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்