SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

1,800க்கு விற்ற செவ்வாழை 550க்கு விற்பனை குமரியில் வாழை குலை விலை வீழ்ச்சி

2018-07-14@ 01:58:16

நாகர்கோவில்: நாகர்கோவில்  அப்டா மார்க்கெட்டுக்கு நெல்லை, தேனி, மதுரை, மேட்டுப்பாளையம் உள்பட வெளி மாவட்டங்களில் இருந்து வாழை குலைகள் வருகின்றன. அப்டா மார்க்கெட்டில் திங்கள், செவ்வாய், வியாழன், வெள்ளி ஆகிய நாட்களில் வாழை சந்தை நடக்கிறது.
 குமரி மாவட்டத்தில் ஓகி புயலுக்கு பிறகு மாவட்டத்தில் இருந்து  வாழை குலை வரத்து இல்லாமல் இருந்தது. ஆனால் வெளி மாவட்டங்களில் இருந்து அதிக அளவு வாழை குலைகள் வந்துகொண்டு இருக்கிறது. தற்போது குமரி மாவட்டம் கீரிப்பாறை, தடிக்காரன்கோணம் மற்றும் மேற்கு மாவட்டங்களில் இருந்தும் ஏத்தன் குலை வரத்து தொடங்கியுள்ளது. இதனால் அப்டா மார்க்கெட்டிற்கு அதிக அளவு குலைகள் வருகின்றன. நேற்று அப்டா மார்க்கெட்டில் வாழை சந்தை நடந்தது. குலைகள் வரத்து அதிகமாக இருந்ததால், குலைகள் விலை குறைந்த நிலையில் விற்பனையானது. கடந்த 6 மாதங்களுக்கு முன்பு 1,800 வரை விற்பனையான 80 காய் கொண்ட செவ்வாழை தற்போது 550க்கு விற்பனையானது. இதுபோல் 40காய் கொண்ட ஏத்தன் குலை 400க்கும், 100 காய் கொண்ட நாட்டுபேயன் 200க்கும், 150 காய் கொண்ட ரசகதளி 300க்கும் விற்பனையானது. இதுபோல் 150 காய் கொண்ட மோரீஸ் 300க்கும், 125 காய் கொண்ட வெள்ளைதொழுவன் 250க்கும், 200 காய் கொண்ட மட்டி குலை 500க்கும் விற்பனையானது.
150 காய் கொண்ட பாளையங்கொட்டை குலை 200க்கும் விற்பனையானது.

போதிய விலை இல்லாத காரணத்தால் விவசாயிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இது குறித்து அப்டா மார்க்கெட் வாழைகுலை வியாபாரி நடராஜன் கூறியதாவது: வெளிமாவட்டங்களில் இருந்து அதிகஅளவு குலைகள் வருகிறது. குமரி மாவட்டத்தில் இருந்தும் ஏத்தன்குலை அதிகஅளவு வருகிறது. தற்போது சுபமூகூர்த்த தினங்கள் இல்லாதகாரணத்தால், வாழைகுலைகள் குறைந்த விலைக்கு விற்பனையாகி வருகிறது. தற்போது பலாப்பழம், மாம்பழம் சீசன் நடந்து வருவதால், வாழை பழங்களில் மக்கள் விரும்பம் குறைந்துள்ளது. மேலும் தென்மேற்கு பருவமழை பெய்துவருவதால், கேரளாவில் இருந்து வரும் வியாபாரிகள் குறைந்த அளவே இங்கு வந்து வாழை குலைகளை ஏலம் எடுத்துச்செல்கின்றனர். வாழைகுலை விலை குறைவால் பல வியாபாரிகள் குறைந்த விலைக்கு வாங்கி, தக்கலை, திங்கள் சந்தை, அழகியமண்டபம், மார்த்தாண்டம், ராஜாக்கமங்கலம் உள்ளிட்ட முக்கியமான இடங்களில் ஆட்கள் கூடும் பகுதியில் டெம்போக்களில்  குலைகளை  எடைபோட்டு விற்பனை செய்து வருகின்றனர். அவர்கள் ஒரு கிலோ ரசகதளி பழம் 40க்கும், வெள்ளை தொழுவன் ஒரு கிலோ 40க்கும் விற்பனை செய்து வருகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • yemen_displace_people

    பல்வேறு பகுதியில் இருந்து ஏமன் தலைநகருக்கு இடம்பெயரும் மக்கள்: உயிர்வாழ போராடும் காட்சிகள்!

  • thailand_boys_prayer

    தாய்லாந்து குகையில் மீட்கப்பட்ட சிறுவர்கள், அதிர்ஷ்ட வசமாக உயிர் தப்பியதை எண்ணி பிரார்த்தனை!

  • Chinesestudentsskillssummer

    திறமைகளை வளர்ப்பது மூலம் கோடை விடுமுறையை செலவிடுகின்றனர் சீன மாணவர்கள்

  • watermelonasrita

    தமது வயிற்றில் அதிக தர்பூசணியை வைத்து தாமே வெட்டி சாதனை படைத்த அஸ்ரிதா ஃபர்மேன்

  • harry_megan_mandela

    லண்டனில் நெல்சன் மண்டேலா கண்காட்சிக்கு வருகை புரிந்த இளவரசர் ஹாரி மற்றும் மேகன் மார்க்லே!: புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்