SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

உற்பத்தி உயர்ந்தும் விலை இல்லை தேன் உற்பத்தியாளர்கள் கவலை

2018-07-14@ 01:56:52

மார்த்தாண்டம்: குமரி மாவட்டத்தில் கல்குளம், விளவங்கோடு தாலுகா பகுதிகளில் தேன் உற்பத்தி அதிகமாக செய்யப்படுகிறது. இங்கு உற்பத்தி செய்யப்படும்  தேனை, தேன் கூட்டுறவு சங்கம் கொள்முதல் செய்து வருகிறது. தேனுக்கு வாரியம் ஏதும் இல்லாத காரணத்தால், கேரள மாநிலம் கோட்டயத்தில் கொள்முதல் செய்யப்படும் விலைக்கு ஏற்றவகையில் தேன்கூட்டுறவு சங்கத்திலும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுகிறது. தேன் உற்பத்தியாளர்களிடம் இருந்து ஒரு கிலோ பச்சை தேன் 130க்கு தேன் கூட்டுறவு சங்கம் கொள்முதல் செய்கிறது. இதை சரியான முறையில் தரம் பிரித்து 180 முதல் 340 வரை விற்பனை செய்கின்றனர். குமரியில் கடந்த ஆண்டைவிட தேன் உற்பத்தி அதிகமாக உள்ளது. ஆனால் விலை உயர்வு இல்லாத காரணத்தால் தேன் உற்பத்தியாளர்கள் கவலை அடைந்துள்ளனர். இது குறித்து தேன் உற்பத்தியாளர் ஒருவர் கூறியதாவது:

 குமரி மாவட்டத்தில் மார்த்தாண்டத்தை மையமாக வைத்து தேன் உற்பத்தி நடக்கிறது. கடந்த 3 வருடமாக தேன் ஒரு கிலோ 130க்கு கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. கடந்த இரு வருடமும் பருவமழை இல்லாத காரணத்தால் தேன் உற்பத்தி பாதிப்பு அடைந்தது. கடந்த வருடம் சுமார் 80 ஆயிரம் டன் தேன் உற்பத்தியானது. ஆனால் இந்த வருடம் பருவமழை பெய்ததால், ரப்பர் தேன் சீசன் கைகொடுத்தது. ரப்பரில் தேன் கிடைக்கும் சீசன் பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மாதம் ஆகும். இந்த வருடம் சுமார் 98 ஆயிரம் டன் தேன் உற்பத்தி ஆகியுள்ளது.  தேன் உற்பத்தி அதிகரித்ததால் கொள்முதல் விலை கூடும் என எதிர்பார்த்தோம். ஆனால் விலை அதிகரிக்காதது கவலை அளிப்பதாக உள்ளது என்றார்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • YosemityNationalPark

    கலிபோர்னியாவின் யோசெமிட்டி தேசியப் பூங்கா அருகே பயங்கர காட்டுத்தீ: சுமார் 9,300 ஏக்கர் நிலம் நாசம்!

  • madhyapradeshrain

    மத்தியப்பிரதேசத்தில் பல்வேறு இடங்களில் கனமழை : பொதுமக்கள் கடுமையாக பாதிப்பு

  • nanteswarcowmarriage

    நந்தேஸ்வரில் மழை பெய்ய வேண்டி மாடுகளுக்கு திருமணம் செய்யும் வினோத வழிபாடு

  • LavaBombHawaii

    ஹவாய் தீவில் பறந்து வந்து வெடித்த எரிமலை குழம்பு மற்றும் பாறைகள்: 23 பேருக்கு தீக்காயம்!

  • Croatiaplayersreception

    குரோஷியா கால்பந்து வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்