SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இந்திய பருத்தி கழகத்துடன் இணைந்து குறு, சிறு நூற்பாலைகளுக்கு பஞ்சு விற்பனை செய்ய ஏற்பாடு

2018-07-14@ 01:54:28

கோவை: தேசிய சிறு தொழில் கழகம் (என்எஸ்ஐசி) வரும் அக்டோபர் மாத பருத்தி சீசனின் போது குறு, சிறு பஞ்சாலைகளுக்கு தேவையான பஞ்சை குறைந்த விலையில் விற்க  ஏற்பாடு செய்து வருகிறது. தமிழகத்தில் 1,800 நூற்பாலைகள் உள்ளன. இவற்றுக்கு ஆண்டுக்கு 125 லட்சம் பேல் பருத்தி தேவை. தமிழகத்தில் 5 லட்சம் பேல் மட்டுமே உற்பத்தியாகிறது. மீதி தேவைக்கு குஜராத் உள்ளிட்ட வட மாநிலங்களில் கொள்முதல் செய்யப்படுகிறது. அக்டோபர் முதல் செப்டம்பர் வரை பருத்தி வரத்து இருந்தாலும், அவை முதல் ஆறு மாதத்திற்கு பிறகு விலை அதிகரிக்க துவங்குகிறது.

இதனால் ஆண்டுதோறும் குறு, சிறு நூற்பாலைகள் 50 சதவீதத்திற்கு மேல் உற்பத்தி நிறுத்தத்திற்கு ஆளாகின்றன. இதனால் கோவை மண்டல தேசிய சிறு தொழில் கழக அலுவலகம் தமிழகத்தில் உள்ள குறு, சிறு நூற்பாலைகளுக்கு தேவையான பஞ்சை குறைந்த விலையில்விற்க ஏற்பாடு செய்கிறது.
இதுகுறித்து தேசிய சிறு தொழில் கழகத்தின் (என்எஸ்ஐசி) கோவை மண்டல முதுநிலை மேலாளர் கண்ணன் கூறியதாவது: கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல் மாவட்ட குறு, சிறு தொழில் வளர்ச்சிக்காக, இரும்பு, ஸ்டீல், காப்பர், அலுமினியம், மெழுகு ஆகிய மூலப்பொருட்களை மொத்த உற்பத்தியாளர்களிடம் வாங்கி, இருப்பு வைத்து, குறைந்த விலையில் விற்கிறோம்.

நூற்பாலைகளின் தேவையை கருதி, புதிதாக பஞ்சு கொள்முதல் செய்து, குறைந்த விலையில் விற்க முடிவெடுத்துள்ளோம். இதற்கான ஏற்பாடுகளை இந்திய பருத்தி கழகத்துடன் மேற்கொண்டுள்ளோம். வரும் அக்டோபரில் துவங்கும் பருத்தி சீசனில் பஞ்சு விற்பனை கோவையில் துவங்க உள்ளது. ஒரு பேல் தேவைப்படக்கூடிய மிகச்சிறிய நூற்பாலைகளும் கூட வாங்கி பயன்பெற முடியும். வட மாநிலத்தில் கொள்முதல் விலையை விட குறைவாக இருக்கும். வரும் அக்டோபர் முதல் குறு, சிறு நூற்பாலைகள் தங்களது ஆர்டர்களை என்எஸ்ஐசிக்கு தெரிவிக்கலாம் என்றார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • HodeidahYemen

    ஏமனில் உள்நாட்டுப் போர் தீவிரம்...! ஹூடேடா துறைமுகத்தில் நடந்த சண்டையில் 61 பேர் பலி

  • PizzaGuinnessArgentina

    அர்ஜென்டினாவில் 12 மணி நேரத்தில் 11,287 பீட்சாக்களை தயாரித்து சமையல் கலைஞர்கள் கின்னஸ் சாதனை

  • JordanFloodPetra12

    ஜோர்டானில் வரலாறு காணாத கனமழையால் வெள்ளத்தில் சிக்கி 12 பேர் பலி: மீட்பு பணிகள் தீவிரம்

  • EbolaCongoAfrica200

    தீவிரமடையும் எபோலா வைரஸ்..: ஆப்பிரிக்க நாடான காங்கோவில் 200 பேர் பலி!

  • AssemblyChattisgarElection18

    சத்தீஸ்கர் மாநிலத்தில் பலத்த பாதுகாப்புடன் முதற்கட்ட தேர்தல் வாக்குப்பதிவு: ஆர்வத்துடன் வாக்களிக்கும் மக்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்