SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

விரைவில் சட்டம் கொண்டு வர முடிவு சிறுமிகளை பலாத்காரம் செய்தால் மரண தண்டனை : உத்தரகாண்ட் அரசு அறிவிப்பு

2018-07-14@ 01:42:42

டேராடூன்: சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்வோருக்கு மரண தண்டனை விதிக்கும் சட்டம் கொண்டு வரப்பட உள்ளதாக உத்தரகாண்ட் முதல்வர் திரிவேந்திரா சிங் ராவத் அறிவித்துள்ளார். உத்தரகாண்ட் மாநில பாஜ செயற்குழு கூட்டம், அம்மாநில முதல்வர் திரிவேந்திரா சிங் ராவத் தலைமையில் காசிபூரில் நேற்று நடந்தது. இதில் பங்கேற்ற அவர், ‘‘சிறுமிகளுக்கு எதிரான பலாத்கார குற்றங்கள் அதிகரிப்பது கவலை அளிக்கும் விதமாக உள்ளது. இத்தகைய குற்றங்கள், கடுமையான சட்டங்கள் மூலம் தடுக்கப்பட வேண்டும். எனவே, சிறுமிகளை பலாத்காரம் செய்வோருக்கு தூக்கு தண்டனை விதிக்கும் வகையில் சட்டம் கடுமையாக்கப்படும். இதற்கான முயற்சியில் மாநில அரசு ஈடுபட்டுள்ளது. இதற்கான மசோதா, சட்டப்பேரவையின் அடுத்த கூட்டத்தில் தாக்கல் செய்யப்படும்’’ என்றார்.

ஏற்கனவே, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், அரியானா மாநில அரசுகள் 12 வயதுக்கு உட்பட்ட சிறுமிகளை பலாத்காரம் செய்வோருக்கு மரண தண்டனை விதிக்கும் சட்ட  மசோதாவை சட்டப்பேரவையில் நிறைவேற்றி உள்ளன. இதேபோல், மத்திய அரசும் சிறுமிகளை பலாத்காரம் செய்தால் மரண தண்டனை விதிக்கக் கூடிய கிரிமினல் சட்ட திருத்த மசோதாவை வரும் 18ம் தேதி தொடங்க உள்ள நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் தாக்கல் செய்ய உள்ளது.

அமித்ஷா கனவை நிறைவேற்றுவோம்


செயற்குழு கூட்டத்தில் முதல்வர் திரிவேந்திரா சிங் ராவத் பேசுகையில், ‘‘பிரதமர் மோடியின் நாடாளுமன்ற தேர்தல் திட்டத்தை வெற்றி பெறச் செய்யும் வகையில், நிர்வாகிகள் அனைவரும் பூத் வாரியாக கட்சியை வலுப்படுத்தி, பாஜ அரசின் மக்கள் நலத்திட்டங்கள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். பாஜ அரசு வாக்குறுதி அளித்தபடி, ஊழல் இல்லாத நிர்வாகத்தை தந்துள்ளது. 2019 மக்களவைத் தேர்தலில், அமித் ஷாவின் கனவான 350 இடங்களில் வெற்றி பெறுவதை நாம் நிறைவேற்றுவோம்’’ என்றார்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • YosemityNationalPark

    கலிபோர்னியாவின் யோசெமிட்டி தேசியப் பூங்கா அருகே பயங்கர காட்டுத்தீ: சுமார் 9,300 ஏக்கர் நிலம் நாசம்!

  • madhyapradeshrain

    மத்தியப்பிரதேசத்தில் பல்வேறு இடங்களில் கனமழை : பொதுமக்கள் கடுமையாக பாதிப்பு

  • nanteswarcowmarriage

    நந்தேஸ்வரில் மழை பெய்ய வேண்டி மாடுகளுக்கு திருமணம் செய்யும் வினோத வழிபாடு

  • LavaBombHawaii

    ஹவாய் தீவில் பறந்து வந்து வெடித்த எரிமலை குழம்பு மற்றும் பாறைகள்: 23 பேருக்கு தீக்காயம்!

  • Croatiaplayersreception

    குரோஷியா கால்பந்து வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்