SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

காப்பகத்தில் குழந்தை விற்பனை அறக்கட்டளை குறித்து விசாரிக்க வேண்டும் : ஆர்எஸ்எஸ் வலியுறுத்தல்

2018-07-14@ 01:41:59

புதுடெல்லி:  ‘குழந்தையை விற்ற அறக்கட்டளை குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும்’ என ஆர்எஸ்எஸ் வலியுறுத்தி உள்ளது. ஜார்கண்ட் மாநிலம், ராஞ்சியில் ‘மிஷனரிஸ் ஆப் சாரிட்டி’ என்ற பெயரில் குழந்தைகள் காப்பகம் செயல்பட்டு வருகிறது. கொல்கத்தாவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் இந்த காப்பகத்தில், மைனர் பெண்ணுக்கு பிறந்த குழந்தையை ஒரு தம்பதிக்கு விற்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக காப்பகத்தை சேர்ந்த கன்னியாஸ்திரியும்,  ஊழியரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தும்படி குழந்தைகள் பாதுகாப்பு ஆணையத்துக்கு முதல்வர் ரகுபர்தாஸ் உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில், இது தொடர்பாக ஆர்எஸ்எஸ் டெல்லி பிரிவை வேர்ந்த ராஜீவ் துளி கூறுகையில், “ இது மிகவும் தீவிரமான பிரச்னை. மிஷினரி ஆப் சாரிட்டி குறித்து விசாரணை நடத்த உத்தரவிடவேண்டும்” என்றார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • thailand_boys_prayer

    தாய்லாந்து குகையில் மீட்கப்பட்ட சிறுவர்கள், அதிர்ஷ்ட வசமாக உயிர் தப்பியதை எண்ணி பிரார்த்தனை!

  • Chinesestudentsskillssummer

    திறமைகளை வளர்ப்பது மூலம் கோடை விடுமுறையை செலவிடுகின்றனர் சீன மாணவர்கள்

  • watermelonasrita

    தமது வயிற்றில் அதிக தர்பூசணியை வைத்து தாமே வெட்டி சாதனை படைத்த அஸ்ரிதா ஃபர்மேன்

  • harry_megan_mandela

    லண்டனில் நெல்சன் மண்டேலா கண்காட்சிக்கு வருகை புரிந்த இளவரசர் ஹாரி மற்றும் மேகன் மார்க்லே!: புகைப்படங்கள்

  • ethiopia_eritria_flight

    எத்தியோப்பியா-எரிட்ரியா இடையே விமான சேவை: 20 ஆண்டுக்கு பின் கண்ணீர் மல்க உறவினர்களை வரவேற்ற மக்கள்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்