SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சீன பயணம் குறித்து ராகுல் கிண்டல் வெளிநாட்டின் அழுத்தத்திற்கு சரணடையும் பிரதமர் மோடி

2018-07-14@ 01:41:31

புதுடெல்லி: ‘‘வெளிநாட்டின் அழுத்தத்திற்கு சரணடைந்த ஒரே இந்திய பிரதமர் மோடிதான்’’ என அவரது சீன பயணத்தை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கிண்டலடித்துள்ளார். சீனாவை ஒட்டிய மலைப்பிரதேச எல்லையில் பாதுகாப்பு பணிக்காக புதிதாக வீரர்களை தேர்வு செய்யும் திட்டம் நிதி பற்றாக்குறையால் ராணுவம் கிடப்பில் போட்டுள்ளதாக மீடியா ஒன்றில் செய்தி வெளியானது.

இதை குறிப்பிட்டு, ராகுல் காந்தி நேற்று தனது டிவிட்டர் பதிவில், ‘எந்த நிகழ்ச்சியும் இல்லாத பிரதமர் மோடியின் சீன பயணத்தில் மறைமுக நிகழ்ச்சி இருப்பது தற்போது வெளியாகி உள்ளது. இந்திய வரலாற்றில் அந்நிய சக்திகளுக்கு பிரதமர் சரணடைந்தது இதற்கு முன் நடந்ததில்லை. இதில் இருந்தே பாஜவின் தேசப்பற்று முழுமையாக தெரிகிறது’ என கூறியுள்ளார். பிரதமர் மோடி, அரசு முறையில்லாத பயணமாக கடந்த ஏப்ரலில் சீனா சென்று வந்தார். அப்போது எல்லை விவகாரம் உள்ளிட்ட இரு நாடுகளுக்கு இடையேயான பிரச்னைகள் குறித்து பிரதமர் மோடியும், சீன அதிபர் ஜின்பிங்கும் பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல்கள் வெளியாகின. இந்த பயணத்தை தான், நிகழ்ச்சி இல்லாத பயணம் என ராகுல் கிண்டலடித்துள்ளார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 19-02-2019

    19-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • artexpo

    சென்னையில் ஓவியர் சீனிவாசலு நினைவாக கலானுபாவா ஓவிய கண்காட்சி

  • modimeetmaurico

    பிரதமர் மோடியுடன் அர்ஜென்டினா அதிபர் மவுரிசியோ மக்ரி சந்திப்பு : முக்கிய ஒப்பந்தங்கள் குறித்து பேச்சுவார்த்தை

  • Switzerlandhorse

    சுவிட்சர்லாந்தில் உற்சாகத்துடன் களைகட்டிய குளிர்கால ஹார்ஸ் ரேஸ் போட்டி

  • germanyrecord

    ஜெர்மனியில் கார்ட்டூன் கதாப்பாத்திரம் போன்று வேடமிட்டு 2,762 பேர் ஒரே இடத்தில் நடனமாடி சாதனை

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்