SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சமூக வலைதளங்கள் மீது கண்காணிப்பு மத்திய அரசு பதில் அளிக்க உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

2018-07-14@ 01:41:00

புதுடெல்லி: சமூக வலைதளங்களை கண்காணிக்க தனியாக மையம் அமைப்பதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு பதில் அளிக்கும்படி மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வாட்ஸ் அப், டிவிட்டர், இன்ஸ்டாகிராம், பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் கலவரத்தை தூண்டுதல், தீவிரவாதத்தை பரப்புவது போன்ற, நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தக் கூடிய தகவல்கள் அதிகளவில் பகிரப்படுகின்றன.
இந்நிலையில், சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல்களை சேகரித்து ஆய்வு செய்யவும், அவற்றை கண்காணிக்கவும் ‘சமூக வலைதள தகவல் தொடர்பு மையம்’ என்ற புதிய அமைப்பை உருவாக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு தேவையான மென்பொருள் தொழில்நுட்பத்தை விநியோகிக்க, ‘இந்திய ஒளிபரப்பு தொழில்நுட்ப பொறியியல் ஆலோசனை நிறுவனம்’ சார்பில் ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தப்புள்ளிகள் அடுத்த மாதம் 20ம் தேதி திறக்கப்பட உள்ளன.

மத்திய அரசின் இந்த நடவடிக்கையை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் மேற்கு வங்கத்தை சேர்ந்த திரிணாமுல் காங்கிரஸ் எம்எல்ஏ மகுவா மொய்த்ரா வழக்கு தொடர்ந்துள்ளார். அதில், மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு தடை விதிக்கும்படி கோரியுள்ளார். தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் கன்வில்கர், சந்திராசூட் அடங்கிய அமர்வு இதை விசாரித்து வருகிறது. இந்த வழக்கு கடந்த மாதம் 18ம் தேதி விசாரணைக்கு வந்தபோது, இதை அவசர வழக்காக விசாரிக்க நீதிபதிகள் மறுத்து விட்டனர்.இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் சார்பில் காங்கிரஸ் மூத்த தலைவரும், மூத்த வழக்கறிஞருமான சிங்வி ஆஜரானார். அப்போது அவர், ‘‘சமூக வலைதளங்களை கண்காணிப்பதற்கான ஒப்பந்தத்தை மத்திய அரசு கோரியுள்ளது. இந்த ஒப்பந்தப்புள்ளிகள் ஆகஸ்ட் 20ம் தேதி திறக்கப்பட உள்ளன. இதற்கு தடை விதிக்க வேண்டும்’’ என்று வாதிட்டார். அப்போது நீதிபதிகள், மத்திய செய்தி மற்றும் ஒலிபரப்புத் துறையின் இந்த செயலுக்கு கண்டனம் தெரிவித்தனர்.

மேலும், ‘இதுபோல் செய்வது, கண்காணிப்பு அரசை உருவாக்குவது போலாகிவிடும்’ என்று கூறிய நீதிபதிகள், இந்த மனுவுக்கு 2 வாரத்தில் பதில் அளிக்கும்படி மத்திய அரசு உத்தரவிட்டனர். அதோடு, இந்த வழக்கின் விசாரணைக்கு உதவும்படி அட்டர்னி ஜெனரல் கே.கே.வேணுகோபாலையும் கேட்டுக் கொண்டனர். பின்னர், வழக்கை ஆகஸ்ட் 3ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • YosemityNationalPark

  கலிபோர்னியாவின் யோசெமிட்டி தேசியப் பூங்கா அருகே பயங்கர காட்டுத்தீ: சுமார் 9,300 ஏக்கர் நிலம் நாசம்!

 • madhyapradeshrain

  மத்தியப்பிரதேசத்தில் பல்வேறு இடங்களில் கனமழை : பொதுமக்கள் கடுமையாக பாதிப்பு

 • nanteswarcowmarriage

  நந்தேஸ்வரில் மழை பெய்ய வேண்டி மாடுகளுக்கு திருமணம் செய்யும் வினோத வழிபாடு

 • LavaBombHawaii

  ஹவாய் தீவில் பறந்து வந்து வெடித்த எரிமலை குழம்பு மற்றும் பாறைகள்: 23 பேருக்கு தீக்காயம்!

 • Croatiaplayersreception

  குரோஷியா கால்பந்து வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்