SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நாடாளுமன்ற தேர்தலுக்கு பாஜ தயாராகிறது 400 தொகுதிகளில் 200 பேரணி : பிரதமர் மோடி அதிரடி பிரசாரம்

2018-07-14@ 01:40:19

புதுடெல்லி: அடுத்தாண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு நாடு முழுவதும் 400 மக்களவை தொகுதிகளில் 200 பேரணிகளை  நடத்த பாஜ அதிரடியாக திட்டமிட்டுள்ளது. இதில் பிரதமர் மோடி மட்டும் 100 தொகுதிகளில் நடைபெறும் 50 பேரணிகளில் கலந்து கொண்டு பேச உள்ளார்.
 நாடாளுமன்றத்துக்கு அடுத்தாண்டு மே மாதம்  பொதுத்தேர்தல் நடக்கிறது. இதற்காக, பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியை  பலப்படுத்தும் தீவிர முயற்சியில், பாஜ தேசிய தலைவர் அமித்ஷா இறங்கியுள்ளார். கடந்த ஒரு மாதமாகவே ஒவ்வொரு மாநிலத்திற்கும் சென்று பாஜ நிர்வாகிகள், கூட்டணி கட்சியினரை சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார். கட்சியை பலப்படுத்தி தேர்தலை சந்திக்க தயாராகும்படி நிர்வாகிகளுக்கும் அவர் உத்தரவிட்டுள்ளார். பூத் வாரியாக நிர்வாகிகளை நியமித்து தேர்தல் பணியை கண்காணிக்க அவர் முடிவு செய்துள்ளார். இதுதொடர்பாக கடந்த சில தினங்களுக்கு முன் தமிழகத்திலும் வந்து ஆலோசனை நடத்தினார்.

கடந்த 2014ம்  ஆண்டு நடந்த பொதுத்தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்த சந்திரபாபு  நாயுடுவின் ெதலுங்கு தேசம் கட்சி, தற்ேபாது வெளியேறி விட்டது. அதேபோல், மகாராஷ்டிராவில் பலமிக்க சிவசேனாவும் தனித்து போட்டியிடுவதாக அறிவித்து விட்டது. அதேநேரம், கடந்த நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணியில் இல்லாத ஐக்கிய ஜனதா தளம் தற்போது பாஜ.வுடன் இணைந்து பீகார் மாநில ஆட்சி பீடத்தில் உள்ளது. நேற்று முன்தினம் பாட்னா சென்ற அமித்ஷா, ஐக்கிய ஜனதா தள தலைவரும், முதல்வருமான நிதிஷ் குமாரை சந்தித்து கூட்டணியை உறுதிப்படுத்தி உள்ளார். மேலும், ஏற்கனவே  இருந்த கூட்டணி கட்சிகளுடன் தொடர்ந்து கூட்டணியை தொடர பாஜ தலைமை முடிவு  எடுத்துள்ளது. உபி.யில் 2014 நாடாளுமன்ற தேர்தலில் மொத்தம் உள்ள 80 ெதாகுதியில் 73 தொகுதியை பாஜ கூட்டணி கைப்பற்றியது. இங்கு எதிரும் புதிருமாக இருந்த மாயாவதியின் பகுஜன் சமாஜும், அகிலேஷ் யாதவின் சமாஜ்வாடியும் கூட்டணி சேர்ந்துள்ளன. எனவே, நாடாளுமன்ற தேர்தல் பணிகளை முன்கூட்டியே தொடங்க பிரதமர் மோடியும், அமித்ஷாவும் திட்டமிட்டுள்ளனர். தேர்தல் கூட்டணி ேவலைகளை மேற்ெகாள்ள கட்சியின்  உயர்மட்ட நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தற்ேபாதைய ஆட்சியின் சாதனைகளை எடுத்து கூற, அமைச்சர்கள் மட்டத்தில் பொதுக்கூட்டங்கள், ேபரணிகள்  நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இணைய தளங்களில் பாஜவின் சாதனைகளை  எடுத்து கூற, ‘இணையதள ேபார் அறை’ உருவாக்கப்பட்டு, அதற்கான பணிகளும்  நடக்கிறது.

இதற்கிடையே, நாடு முழுவதும் இரண்டு, மூன்று எம்பி ெதாகுதிக்கு  ஒரு பேரணியை நடத்த திட்டமிட்டுள்ளனர். அடுத்த ஆண்டு  பிப்ரவரி மாதத்திற்குள் பிரதமர் மோடி 50 பேரணிகளில் பங்கேற்று பேச உள்ளார்.  100 மக்களவை தொகுதிகளை இணைக்கும் வகையில் இந்த பேரணி நடைபெற உள்ளது. இந்த டிசம்பர் மாதத்திற்குள் சட்டப்பேரவை தேர்தலை சந்திக்க உள்ள மத்தியபிரதேசம், ராஜஸ்தான், சட்டீஸ்கர் ஆகிய மாநிலங்களில் அடுத்தடுத்து வரும் வாரங்களில் பிரதமர் மோடியின் பேரணி நடைபெறும் வகையில் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. பஞ்சாப் மாநிலம் மாலவுட் தொகுதியில் இதே போன்ற பேரணியில் தான் பிரதமர் மோடி பங்கேற்று பேசி பல்வேறு திட்டங்களை அறிவித்து கட்சியினரை உற்சாகப்படுத்தினார். இந்த மாதத்தில் உத்தரபிரதேச மாநிலம் ஷாஜகான்பூர் தொகுதியிலும் இதே போன்ற பேரணியில் பிரதமர் மோடி பங்கேற்ற உள்ளார்.

இதே போன்று  கட்சி தலைவர் அமித் ஷா, மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத்சிங்,  நிதின்கட்கரி உள்ளிட்டோரும் தனித்தனியாக 50 பேரணிகளில் பங்கேற்க உள்ளனர். இந்த சுற்றுப்பயணத்தை நாடு முழுவதும் மக்களிடம் கொண்டு செல்லும் வகையில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
தேர்தல் தேதி அறிவிக்கப்படும் முன், அதாவது பிப்ரவரி மாதத்திற்குள் 400 மக்களவை  ெதாகுதிகளில் 200 ேபரணிகளை நடத்த பாஜ திட்டமிட்டுள்ளது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • artexpo

  சென்னையில் ஓவியர் சீனிவாசலு நினைவாக கலானுபாவா ஓவிய கண்காட்சி

 • modimeetmaurico

  பிரதமர் மோடியுடன் அர்ஜென்டினா அதிபர் மவுரிசியோ மக்ரி சந்திப்பு : முக்கிய ஒப்பந்தங்கள் குறித்து பேச்சுவார்த்தை

 • Switzerlandhorse

  சுவிட்சர்லாந்தில் உற்சாகத்துடன் களைகட்டிய குளிர்கால ஹார்ஸ் ரேஸ் போட்டி

 • germanyrecord

  ஜெர்மனியில் கார்ட்டூன் கதாப்பாத்திரம் போன்று வேடமிட்டு 2,762 பேர் ஒரே இடத்தில் நடனமாடி சாதனை

 • omancyclerace

  ஓமனில் நடைபெற்ற உலக வாகையர் சைக்கிள் பந்தயத்தில் கஜகஸ்தான் வீரர் வெற்றி!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்