SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

திருமணம் ஆசை காட்டி சிறுமி பாலியல் பலாத்காரம் வாலிபருக்கு 7 ஆண்டு சிறை

2018-07-14@ 01:40:16

சென்னை: திருமண ஆசை காட்டி சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து சென்னை மகளிர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சென்னை, வண்ணாரப்பேட்டையை சேர்ந்தவர் சுரேஷ். இவர் அதே பகுதியை சேர்ந்த எட்டாம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவி ஒருவரிடம் ஆசை வார்த்தைகள் கூறி பழகி வந்துள்ளார். கடந்த 2016ம் ஆண்டு திருமணம் செய்து கொள்வதாக கூறி, பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் சிறுமியின் பெற்றோருக்கு தெரியவந்துள்ளது. இதையடுத்து, பெற்றோர்கள் அளித்த புகாரின் பேரில் ராயபுரம் மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்து, சுரோஷை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

இந்த வழக்கு சென்னை மகளிர் நீதிமன்றத்தில் நீதிபதி மஞ்சுளா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, ‘‘இந்த வழக்கில் சாட்சியங்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் குற்றம்சாட்டப்பட்ட சுரோஷ் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, அவருக்கு 7 ஆண்டு சிறை தண்டனையும், 10 ஆயிரம் அபராதமும் விதிக்கப்படுகிறது. மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு 50 ஆயிரம் இழப்பீடாக வழங்க வேண்டும்’’ என்று உத்தரவிட்டார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • philipines_landslidesaccid

    பிலிப்பைன்ஸ் நாட்டில் மீண்டும் நிலச்சரிவு - 29 பேர் உயிரிழப்பு !

  • tanzinaship_accid2121

    டான்ஸானியாவில் படகு விபத்து - உயிரிழந்தோர் எண்ணிக்கை 136 ஆக அதிகரிப்பு

  • iranshooting_festiv0000

    ஈரானில் ராணுவ அணிவகுப்பில் தீவிரவாதிகள் கொடூரத் தாக்குதல்

  • beerfestiv_german123

    ஜெர்மனியில் உலகளவில் பிரசித்தி பெற்ற பியர் திருவிழா - களைகட்டிய உற்சாகம் !

  • china_harrvestingfestiv12

    சீனாவில் களைகட்டிய அறுவடைத் திருவிழா - கோலாகலமாக கொண்டாடப்பட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் !

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்