SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

காவல் நிலையம் மீது தீவிரவாதிகள் தாக்குதல் : 2 சிஆர்பிஎப் வீரர்கள் பலி

2018-07-14@ 01:39:21

ஸ்ரீநகர்:  காஷ்மீரில் காவல் நிலையம் மீது தீவிரவாதிகள் கும்பலாக வந்து தாக்குதல் நடத்தினர். மற்றொரு தாக்குதலில் 2 போலீசார்  கொல்லப்பட்டனர். காஷ்மீர் மாநிலத்தில் தீவிரவாதிகளின் அட்டகாசம் அதிகரித்து வருகிறது. ராணுவ வீரர்கள், போலீசார், அப்பாவி பொதுமக்களை குறிவைத்து தொடர்ந்து தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், குல்காம் மாவட்டத்தில் காவல் நிலையம் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
யாரிபோரா காவல் நிலையத்திற்கு கும்பலாக வந்த தீவிரவாதிகள் தானியங்கி ஆயுதங்களை பயன்படுத்தி தாக்குதல் நடத்தினர். இதற்கு பாதுகாப்பு படையினரும், போலீசாரும் பதில் தாக்குதல் நடத்தியதால் அவர்கள் தப்பிச் சென்றனர்.

இதைத் தொடர்ந்து, கூடுதல் வீரர்கள் அழைக்கப்பட்டு, அந்த பகுதி முழுவதும் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது. இதனிடையே, அனந்த்நாக் மாவட்டத்தில் அசாபால் சதுக்கம் பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த மத்திய ரிசர்வ் படை போலீசார் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திவிட்டு தப்பிச் சென்றனர். இதில். மத்திய ஆயுதப்படையை சேர்ந்த 2 போலீசார் உயிரிழந்தனர். மேலும் பொதுமக்கள் பலர் காயமடைந்தனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • yemen_displace_people

    பல்வேறு பகுதியில் இருந்து ஏமன் தலைநகருக்கு இடம்பெயரும் மக்கள்: உயிர்வாழ போராடும் காட்சிகள்!

  • thailand_boys_prayer

    தாய்லாந்து குகையில் மீட்கப்பட்ட சிறுவர்கள், அதிர்ஷ்ட வசமாக உயிர் தப்பியதை எண்ணி பிரார்த்தனை!

  • Chinesestudentsskillssummer

    திறமைகளை வளர்ப்பது மூலம் கோடை விடுமுறையை செலவிடுகின்றனர் சீன மாணவர்கள்

  • watermelonasrita

    தமது வயிற்றில் அதிக தர்பூசணியை வைத்து தாமே வெட்டி சாதனை படைத்த அஸ்ரிதா ஃபர்மேன்

  • harry_megan_mandela

    லண்டனில் நெல்சன் மண்டேலா கண்காட்சிக்கு வருகை புரிந்த இளவரசர் ஹாரி மற்றும் மேகன் மார்க்லே!: புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்