SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சென்னையில் திருடி திருவண்ணாமலையில் விற்பனை பைக் திருடர்கள் 2 பேர் கைது

2018-07-14@ 01:37:35

சென்னை: சென்னை அரும்பாக்கம், விநாயகபுரம் மெயின்ரோடு, சந்திப்பில் அரும்பாக்கம் போலீசார் நேற்று முன்தினம் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது, இருசக்கர வாகனத்தில் வேகமாக வந்த 2 வாலிபர்களை நிறுத்தி விசாரித்ததில், இருவரும் இருசக்கர வாகனத்தை திருடியது தெரியவந்தது. விசாரணையில், இருவரும் விருகம்பாக்கம், ஆழ்வார் திருநகர், ெபரியார் நகரை சேர்ந்த பூங்காவனம் (24), திருவண்ணாமலை மாவட்டம், போளூர் தாலுகா, படவேடு பகுதியை சேர்ந்த நித்யானந்தம் (23), என்பதும், இருவரும் சென்னையில் பல்வேறு பகுதிகளில் இருசக்கர வாகனங்களை திருடி திருவண்ணாமலை மாவட்டத்தில் விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து, இருவரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 7 இருசக்கர  வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

 பெரம்பூர் பல்லாடி தெருவை சேர்ந்தவர் சாதிக் அகமது (23) என்பவர் நேற்று முன்தினம் இரவு பணி முடிந்து சாதிக் கிரீம்ஸ் சாலை மற்றும் மூர்ஸ் சாலை சந்திப்பு அருகே சென்று கொண்டிருந்தபோது, அவரிடம் இருந்து 10 ஆயிரம் மதிப்புள்ள செல்போனை பறித்து கொண்டு தப்பிய பள்ளிக்கரணை ராஜலட்சுமி 2வது ெதருவை சேர்ந்த தாரிக் அன்வர் (18) என்பவரை போலீசார் கைது செய்தனர். தப்பி ஓடிய சைதாப்ேபட்டையை சேர்ந்த சதீஷ், வாசு ஆகியோரை தேடி வருகின்றனர். கீழ்ப்பாக்கம் பகுதியில் இருக்கும்  கடைகளில் வைத்திருக்கும் ஆசிரம உண்டியல்களை திருடிய ஆயிரம்விளக்கு, குலாம் அப்பாஸ் அலிகான் தெருவை சேர்ந்த ஆபிரகாம் ஆனந்தன் (21), அருண்குமார் (18) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ₹5 ஆயிரம் ரொக்கம் இருந்த 2 உண்டியல், 2 செல்போன்களை பறிமுதல் செய்யப்பட்டது.

பழவந்தாங்கல் கல்லூரி சாலையை சேர்ந்த சரஸ்வதி (45) என்பவரிடம் நேற்று காலை செல்ேபானை பறித்துக் கொண்டு தப்ப முயன்ற ஜாபர்கான்பேட்டை ஆர்.வி.நகரை சேர்ந்த விக்னேஷ் (20) என்பவரை பொதுமக்கள் தர்மஅடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர். விக்னேஷ் கொடுத்த தகவலின் பேரில், தப்பியோடிய பழவந்தாங்கல் கே.கே.நகரை சேர்ந்த ராஜேஷ் (20) என்பவரையும் கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்து 3 சென்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது.  அடையாறு தாமோதரபுரத்தை சேர்ந்த ரியஸ் எஸ்டேட் அதிபர் சுரேஷ் (40) என்பவரை நேற்று முன்தினம் வெட்டிக்கொலை செய்த வழக்கில், அடையாறு மல்லிகை பூ நகரை  ஓலை சரவணன் (36), சாமுவேல் (27), கோபி (20), அபினாஷ் (20), சிவராமன் (22), சிவக்குமார் (26), தினேஷ் (23) ஆகியோர் பெரும்புதூர் உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நேற்று ஆஜரானார்கள். அவர்களிடம் விசாரணை நடத்தயி நீதிபதி சிவசுப்பிரமணியன், 7 பேரையும், 15 நாள் காவலில் வைக்க உத்தரவிட்டார். இதையடுத்து போலீசார், 7 பேரையும், புழல் சிறையில் அடைத்தனர்.

கோயம்பேட்டில் உள்ள மெட்ரோ ரயில் பணிமனை  வளாகத்தில் அத்துமீறி நுழைந்து, பழைய இரும்பு பொருட்கள், ரயில்  உதிரிபாகங்கள் திருடிய பெரம்பூர், ஆதிகேசவன் நகரை சேர்ந்த மலர் (50), குப்பம்மாள் (40), ஆவடி, கோயில்பதாகையை சேர்ந்த ஆட்டோ டிரைவர் பிரேம் (27) ஆகிய 3 பேரையும் தலைமை செயலக காலனி போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். தாம்பரம் அடுத்த மணிமங்கலம், அண்ணாநகர், கஸ்தூரிபாய் தெருவை சேர்ந்த சரளா (41), தனது விக்ரம் (28) உடன் நேற்று காலை பைக்கில் தாம்பரத்திற்கு வந்து கொண்டிருந்தார். தாம்பரம் முடிச்சூர் சாலை பாரதி நகர் அருகே வரும்போது சக்கரத்தில் புடவை சிக்கியதால், பைக்கில் இருந்து சரளா தவறி விழுந்து தலையில் பலத்த காயமடைந்தார். அவரை சிகிச்சைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 19-02-2019

  19-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • artexpo

  சென்னையில் ஓவியர் சீனிவாசலு நினைவாக கலானுபாவா ஓவிய கண்காட்சி

 • modimeetmaurico

  பிரதமர் மோடியுடன் அர்ஜென்டினா அதிபர் மவுரிசியோ மக்ரி சந்திப்பு : முக்கிய ஒப்பந்தங்கள் குறித்து பேச்சுவார்த்தை

 • Switzerlandhorse

  சுவிட்சர்லாந்தில் உற்சாகத்துடன் களைகட்டிய குளிர்கால ஹார்ஸ் ரேஸ் போட்டி

 • germanyrecord

  ஜெர்மனியில் கார்ட்டூன் கதாப்பாத்திரம் போன்று வேடமிட்டு 2,762 பேர் ஒரே இடத்தில் நடனமாடி சாதனை

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்