SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

விவசாயி கொலை வழக்கில் 4 பெண்கள் உட்பட 7 பேருக்கு ஆயுள் : சேலம் கோர்ட் தீர்ப்பு

2018-07-14@ 01:36:33

சேலம்: விவசாயி கொலை வழக்கில் 4 பெண்கள் உள்பட 7 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து சேலம் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. சேலம் மாவட்டம் ஆத்தூரை அடுத்த தென்குமரை மேற்கு காட்டுக்கெட்டாய் பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடாசலம் (55), விவசாயியான இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த காளியப்பன் மனைவி மல்லிகேஸ்வரி, அவரது மகன் செந்தில்குமார் ஆகியோருக்கும் இடையே விவசாய நிலம் தொடர்பாக தகராறு இருந்து வந்தது.

இந்நிலையில், கடந்த 29.10.2015ம் தேதி இரவு, தனது நிலத்திற்கு சென்ற வெங்கடாசலத்தை, மல்லிகேஸ்வரி, செந்தில்குமார் தரப்பினர் இரும்பு கம்பியால் அடித்து கொலை செய்தனர். இதுகுறித்து தலைவாசல் போலீசார் விசாரித்து, மல்லிகேஸ்வரி(54), செந்தில்குமார்(37), அவரது மனைவி கோமதி(28), உறவினர்கள் சத்தியவாணி(27), யுவராஜ்(27), மாணிக்கம்(60), தங்கம்(57) ஆகிய 7 பேரையும் கைது செய்தனர். இந்த வழக்கு சேலம் 3வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. நேற்று வழக்கை விசாரித்த நீதிபதி எழில், குற்றம்சாட்டப்பட்ட 7 பேருக்கும் ஆயுள் தண்டனை அளித்து உத்தரவிட்டார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 129JawaharlalNehru

    நாட்டின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் 129வது பிறந்தநாள்: அரசியல் தலைவர் மரியாதை

  • 2018TiruvannamalaiDeepam

    திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழா கொடியேற்றத்துடன் இன்று கோலாகலமாக தொடங்கியது

  • israelfire

    காஸா மீது சரமாரியாக குண்டுவீசிய இஸ்ரேல்: ராக்கெட் தாக்குதலுக்கு பதிலடி

  • singaporeasianmodi

    சிங்கப்பூரில் 13வது கிழக்காசிய உச்சி மாநாடு : பிரதமர் மோடி பங்கேற்பு!

  • crowd_thiruchendhuru11

    சூரபத்மனை வதம் செய்தார் சுவாமி ஜெயந்திநாதர் : சூரசம்ஹார நிகழ்ச்சியால் திருச்செந்தூர் விழா கோலம் பூண்டது

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்