SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

மலேசியா, துபாயில் இருந்து கடத்தி வந்த இருவர் சிக்கினர் 24 லட்சம் தங்கம் பறிமுதல்

2018-07-14@ 01:35:36

சென்னை: அடுத்தடுத்து விமானங்களில் வந்த பயணிகளை சோதனை செய்தபோது, 24 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து பாட்டியாக் ஏர்லைன்ஸ் விமானம் நேற்று அதிகாலை 2.30 மணிக்கு சென்னை வந்தது. அதில் வந்த பயணிகளை, சுங்க அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது, ஆந்திர மாநிலம் கடப்பாவை சேர்ந்த நரசிம்மலு (40), சுற்றுலா பயணியாக மலேசியா சென்று திரும்பினார். அவர் மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து, அவரது உடமைகளில் சோதனை செய்தனர். ஆனால், அதில் எதுவும் இல்லை.

அப்போது நரசிம்மலு, முதுகு வலிக்காக போடப்படும் பெல்ட் அணிந்து இருந்தார். அதன் மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அதை கழற்ற முயன்றனர். அதற்கு மறுப்பு தெரிவித்த அவர், ‘நான் ஒரு நோயாளி. இதை கழற்றினால், மயங்கி விழுந்து விடுவேன். என் உயிருக்கே ஆபத்தாகிவிடும். அதை மீறி நீங்கள் கழற்றினால், என் சாவுக்கு நீங்கள்தான் காரணம்’ என கூறி கூச்சலிட்டார்.இதனால், அதிகாரிகளுக்கு மேலும் சந்தேகம் வலுத்தது. பின்னர் விமான நிலைய மருத்துவ குழுவினரை வரவழைத்து, முதுகுவலி பெல்டை கழற்றினர். அப்போது, நரசிம்மலுவுக்கு முதுகு வலிக்காக அணியவில்லை என்பது தெரிய வந்தது. அந்த பெல்ட்டை சோதனையிட்டபோது, உள்ளே சிறு சிறு துண்டுகளாக தங்கத்தை மறைத்து வைத்திருந்ததை கண்டுபிடித்தனர். மொத்தம் 300 கிராம் தங்கத்தை, அதிகாரிகள் கைப்பற்றினர். இதன் சர்வதேச மதிப்பு ₹9 லட்சம். இதையடுத்து அவரை, கைது செய்தனர்.

இதைதொடர்ந்து, துபாயில் இருந்து நேற்று காலை 5 மணிக்கு ஏர் இந்தியா விமானம் சென்னை வந்தது. அதில் வந்த பயணிகளை சுங்க அதிகாரிகள் சோதனையிட்டனர். அதில், சென்னையை சேர்ந்த சுல்தான் (63), சுற்றுலா பயணியாக துபாய் சென்று திரும்பினார். அவர் வைத்திருந்த உடமைகளை, அதிகாரிகள் சோதனையிட்டனர். அதில் எதுவும் இல்லை. இதையடுத்து அவரை தனி அறைக்கு அழைத்து சென்று, உடல் முழுவதும் சோதனையிட்டனர். அப்போதும் அவரிடம் இருந்து எதுவும் சிக்கவில்லை. இருப்பினும் அவர் மீது சந்தேகம் தீரவில்லை. பின்னர், அவர் கொண்டு வந்த உடமைகளை மீண்டும் சோதனையிட்டனர். அதில் ரெக்ஸினால் செய்யப்பட்ட சூட்கேசில் பொருட்களை வைத்திருந்தார். இதையடுத்து அந்த சூட்கேசை பிரித்து சோதனை செய்தபோது, அதன் பக்கவாட்டில் தங்கத்தை கம்பிகளாக உருக்கி, தையல் போட்டு கொண்டு வந்தது தெரிந்தது.இதையடுத்து ரெக்ஸின் சூட்கேசில் இருந்த தங்க கம்பிகளை உருவி வெளியே எடுத்தனர். மொத்தம் 500 கிராம் இருந்தது. இதன் சர்வதேச மதிப்பு ₹15 லட்சம். இதையடுத்து அவரை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்

மருத்துவம்

Medical Trends கைகளின் வலி
Like Us on Facebook Dinkaran Daily News
  • damagedvinayr_idoles00

    விநாயகர் சதுர்த்தியையடுத்து பல்வேறு பகுதிகளில் நீர் நிலைகளில் உடைந்து சிதறி கிடைக்கும் விநாயகர் சிலைகள் !

  • delhiaccid_childead

    டெல்லியில் கட்டடம் இடிந்து விபத்து : பெண் உட்பட 4 குழந்தைகள் பலி !

  • dogsketc_123amer

    பனிச்சறுக்கு விளையாடும் உலகின் முதல் நாய் : வியக்க வைத்த பென்னி !

  • thailandbirdsing

    தாய்லாந்தில் நடைபெற்ற பறவைகள் பாடும் போட்டி : ஆயிரக்கணக்கான பறவைகள் பங்கேற்பு

  • presimodhi_madhya123

    மத்தியப் பிரதேசத்தில் பாஜக நிர்வாகிகள் கூட்டம் : பிரதமர் மோடி, அமித்ஷா பங்கேற்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்