SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Satya Summer Offer

பூந்தமல்லி அருகே குடியிருப்பு பகுதியில் திறக்கப்பட்ட மதுக்கடைக்கு எதிர்ப்பு மக்கள் சாலை மறியல்

2018-07-14@ 01:34:50

பூந்தமல்லி: குடியிருப்பு பகுதியில் புதிதாக திறக்கப்பட்ட டாஸ்மாக் கடையை மூட வலியுறுத்தி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால், போக்குவரத்து ஸ்தம்பித்தது. பூந்தமல்லியில் இருந்து குன்றத்தூர் செல்லும் சாலையில் குமணன்சாவடி அருகே தனியாருக்கு சொந்தமான இடத்தில் சில நாட்களுக்கு முன் புதிதாக டாஸ்மாக் கடை திறக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் 50க்கும் மேற்பட்டோர் நேற்று பிற்பகலில் அந்த கடையை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து ஸ்தம்பித்தது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு வந்த பூந்தமல்லி போலீசார், சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

அப்போது, உயரதிகாரிகளிடம் பேசி டாஸ்மாக் கடையை அகற்ற நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதியளித்தனர். இதையடுத்து, மறியலை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர்.இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறுகையில், ‘‘இந்த பகுதியில் அதிக குடியிருப்புகள் உள்ளன. மேலும் கோயில், பள்ளி, வர்த்தக நிறுவனங்கள் உள்ளன. இந்த இடத்தில் டாஸ்மாக் கடை அமைந்தால், பொதுமக்களுக்கு மிகுந்த சிரமம் ஏற்படும்.  எனவே, இந்த கடையை உடனே மூட வேண்டும்’’என்று தெரிவித்தனர்.


மேலும் செய்திகள்

Satya Summer Offer
Like Us on Facebook Dinkaran Daily News
  • mylai_kabal1

    பங்குனி உத்திர திருவிழா : மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் தேரோட்டம் கோலாகலம்

  • parade_eye1

    புனித பாட்ரிக் தினம் :காணுமிடமெல்லாம் பசுமையை குறிக்கும் பச்சைநிற ஆடையுடன் அணிவகுப்பு

  • newattack

    நியூசிலாந்து மசூதியில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் பரிதாபமாக 8 இந்தியர்கள் பலி

  • siva_muthu12

    காரைக்குடி முத்துமாரியம்மன் கோவில் திருவிழா! : ஏராளமான பக்தர்கள் பால்குடங்களுடன் ஊர்வலம்

  • manohar_cm12

    கோவா முதல்வர் மனோகர் பாரிக்கரின் உடலுக்கு அரசியல் பிரமுகர்கள், பொதுமக்கள் அஞ்சலி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்