கோவையில் சிபிஐ அதிகாரிகள் என கூறி மருந்துக்கடை உரிமையாளரிடம் 50 லட்சம் கேட்டு மிரட்டல்
2018-07-14@ 01:32:21

சோமனூர்: கோவை மாவட்டம் கருமத்தம்பட்டியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் ஓவிய ஆசிரியராக பணியாற்றி வருபவர் விக்டர் கனகராஜ். இவரது மனைவி சத்யா. இவர் கருமத்தம்பட்டி நால்ரோட்டில் மருந்துக்கடை நடத்தி வருகிறார். இவர் நேற்று முன்தினம் மாலை கடையில் இருந்தபோது சி.பி.ஐ. அதிகாரிகள் என கூறிக்கொண்டு 7 பேர் அங்கு வந்தனர்.சத்யா மருத்துவம் படிக்காமல் மருந்தகத்தில் வைத்தியம் பார்ப்பதாக புகார் வந்திருப்பதால் கைது செய்ய உள்ளதாக கூறினர். பின்னர் சத்யாவை அவரது வீட்டுக்கு அழைத்து சென்றனர். அப்போது, கணவர் விக்டர் கனகராஜிடம், `கைது செய்யாமல் இருக்க 50 லட்சம் பணம் கொடுக்க வேண்டும்’ என்று மிரட்டியுள்ளனர். மேலும், சத்யா வங்கி கணக்கில் 40 ஆயிரத்தை தங்களது அக்கவுண்ட்டுக்கு மாற்றியும், அவரது செல்போனையும் பறித்துக் கொண்டனர். அறையில் இருந்த விக்டரை தனி அறையில் வைத்து பூட்டினர்.
இதன்பின் சத்யா, தனது உறவினரிடம் மீதி பணம் வாங்கி தருவதாக கூறி உள்ளார். இதையடுத்து, ஒருவர் மட்டும் சத்யாவுடன் அருகில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றனர். உறவினர்களிடம் `சிபிஐ அதிகாரிகள் தன்னை கைது செய்யாமல் இருக்க பணம் கேட்கிறார்கள்’ என்று சத்யா தெரிவித்தார். அவர்கள் உடனே, கருமத்தம்பட்டி காவல் நிலையத்துக்கு ரகசியமாக தகவல் தெரிவித்தனர். சிறிது நேரத்தில் சத்யாவின் வீட்டுக்கு கருமத்தம்பட்டி போலீசார் சென்றனர்.
போலீசாரை பார்த்ததும் அங்கிருந்தவர்களில் 3 பேர் தப்பியோடினர். 4 பேர் போலீசில் சிக்கினர்.
விசாரணையில் இவர்கள், பெருமாள்(45), மதுரைவீரன்(21), மகேஸ்வரன்(46), இளையராஜா(22) என்பதும், போலி சிபிஐ அதிகாரிகளான இவர்கள் சத்யாவை மிரட்டி பணம் பறிக்க வந்தவர்கள் என்பதும் தெரியவந்தது. இவர்களில் பெருமாள், ஏற்கனவே காவல் துறையில் பணியாற்றி தவறான நடவடிக்கையால் பணிநீக்கம் செய்யப்பட்டவர் என்பதும், பணியில் இருக்கும் டி.எஸ்.பி ஒருவருடன் தனது செல்போனில் பேசி இருந்ததும் தெரியவந்துள்ளது. இதன்பின், 4 பேரையும் கைது செய்ததுடன், 40 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர். தலைமறைவான 3 பேரை கருமத்தம்பட்டி முதலிபாளையம் பகுதியில் பதுங்கியிருந்தபோது போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர்.
மேலும் செய்திகள்
மனைப்பிரிவுக்கு அனுமதி தர ரூ15 ஆயிரம் லஞ்சம் நகராட்சி ஆணையருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை: 15 ஆண்டுகளுக்கு பிறகு தீர்ப்பு
கோபி ஆர்டிஓ ஆபீசில் லஞ்சம் வாங்கிய உதவியாளர் கைது
தலைமை செயலாளர் பெயரை பயன்படுத்தி அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.2 கோடி மோசடி: பெண் உட்பட 2 பேர் கைது
கோயம்பேடு பூ மார்க்கெட்டில் இளம்பெண் கழுத்தறுத்து கொலை: வாலிபருக்கு வலை
மயக்க மருந்து கொடுத்து பெண் பலாத்காரம்: வட மாநில ஆசாமியிடம் விசாரணை
மாநகர பஸ் கண்டக்டரை கொல்ல முயன்ற 4 கல்லூரி மாணவர்கள் கைது
19-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்
சென்னையில் ஓவியர் சீனிவாசலு நினைவாக கலானுபாவா ஓவிய கண்காட்சி
பிரதமர் மோடியுடன் அர்ஜென்டினா அதிபர் மவுரிசியோ மக்ரி சந்திப்பு : முக்கிய ஒப்பந்தங்கள் குறித்து பேச்சுவார்த்தை
சுவிட்சர்லாந்தில் உற்சாகத்துடன் களைகட்டிய குளிர்கால ஹார்ஸ் ரேஸ் போட்டி
ஜெர்மனியில் கார்ட்டூன் கதாப்பாத்திரம் போன்று வேடமிட்டு 2,762 பேர் ஒரே இடத்தில் நடனமாடி சாதனை