SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பள்ளி கல்வித்துறையை கண்டித்து ஆர்ப்பாட்டம்

2018-07-14@ 01:31:39

பல்லாவரம்: பல்லாவரத்தில் பள்ளி கல்வித்துறையை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.ஆறாம் வகுப்பு பள்ளி பாடப்புத்தகத்தில் இருந்து முத்துராமலிங்க தேவரின் வாழ்க்கை வரலாற்றை நீக்கிய தமிழக அரசு மற்றும் பள்ளி கல்வித்துறையை கண்டித்து, காஞ்சிபுரம் மாவட்ட அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி சார்பில், பல்லாவரம் பேருந்து நிலையம் அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.இதில், சென்னை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த அக்கட்சி தொண்டர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு, தமிழக அரசு மற்றும் பள்ளிக் கல்வித்துறைக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.
பின்னர் கட்சி நிர்வாகிகள் நிருபர்களிடம் கூறியதாவது:

முத்துராமலிங்க தேவரின் வாழ்க்கை வரலாற்றை பாடப் புத்தகத்தில் இருந்து நீக்கிய தமிழக அரசின் செயல் கண்டிக்கத்தக்கது. அவரின் வாழ்க்கை வரலாறை மீண்டும் பாட புத்தகத்தில் சேர்க்கும் வரை எங்களது போராட்டம் தொடரும். மேலும் சுதந்திர இந்தியாவிற்காக பாடுபட்ட ஒரு தேசிய தலைவரை பாடப்புத்தகத்தில் இருந்து நீக்கியதற்காக தமிழக அரசு இந்த மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 19-02-2019

    19-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • artexpo

    சென்னையில் ஓவியர் சீனிவாசலு நினைவாக கலானுபாவா ஓவிய கண்காட்சி

  • modimeetmaurico

    பிரதமர் மோடியுடன் அர்ஜென்டினா அதிபர் மவுரிசியோ மக்ரி சந்திப்பு : முக்கிய ஒப்பந்தங்கள் குறித்து பேச்சுவார்த்தை

  • Switzerlandhorse

    சுவிட்சர்லாந்தில் உற்சாகத்துடன் களைகட்டிய குளிர்கால ஹார்ஸ் ரேஸ் போட்டி

  • germanyrecord

    ஜெர்மனியில் கார்ட்டூன் கதாப்பாத்திரம் போன்று வேடமிட்டு 2,762 பேர் ஒரே இடத்தில் நடனமாடி சாதனை

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்