SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

ஆந்திராவில் இருந்து சிமென்ட் ஏற்றி வந்த லாரி தீப்பிடித்து எரிந்து நாசம்

2018-07-14@ 01:31:04

பல்லாவரம்: ஆந்திராவில் இருந்து சிமென்ட் ஏற்றி வந்த லாரி தீப்பிடித்து எரிந்து நாசமானது. ஆந்திராவில் இருந்து சிமென்ட் மூட்டைகளை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று சென்னை அனகாபுத்தூர் நோக்கி புறப்பட்டது. திருப்போரூரை சேர்ந்த டிரைவர் குமரேசன் (44) லாரியை ஓட்டினார். நேற்று அதிகாலை 5 மணியளவில் தாம்பரம் - மதுரவாயல் பைபாஸ் சர்வீஸ் சாலையில், பம்மல் பெட்ரோல் பங்க் அருகில்,  லாரியை நிறுத்திய டிரைவர், அங்குள்ள கடையில் டீ குடிக்க சென்றார்.

சிறிது நேரத்தில் லாரியின் இன்ஜினில் இருந்து கரும்புகை வெளியேறி, திடீரென தீப்பிடித்தது. காற்றில் தீ வேகமாக பரவி, கொழுந்துவிட்டு எரிந்தது. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த டிரைவர், அக்கம் பக்கத்தினர் உதவியுடன் தீயை அணைக்க முயன்றார். ஆனால், முடியவில்லை. தகவலறிந்து தாம்பரம் தீயணைப்பு படையினர் விரைந்து வந்து சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். அதற்குள் லாரி மற்றும் அதில் இருந்த சிமென்ட் மூட்டைகள் முற்றிலும் எரிந்து நாசமானது. இதுகுறித்து சங்கர் நகர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • philipines_landslidesaccid

    பிலிப்பைன்ஸ் நாட்டில் மீண்டும் நிலச்சரிவு - 29 பேர் உயிரிழப்பு !

  • tanzinaship_accid2121

    டான்ஸானியாவில் படகு விபத்து - உயிரிழந்தோர் எண்ணிக்கை 136 ஆக அதிகரிப்பு

  • iranshooting_festiv0000

    ஈரானில் ராணுவ அணிவகுப்பில் தீவிரவாதிகள் கொடூரத் தாக்குதல்

  • beerfestiv_german123

    ஜெர்மனியில் உலகளவில் பிரசித்தி பெற்ற பியர் திருவிழா - களைகட்டிய உற்சாகம் !

  • china_harrvestingfestiv12

    சீனாவில் களைகட்டிய அறுவடைத் திருவிழா - கோலாகலமாக கொண்டாடப்பட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் !

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்