SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

மீனவ கிராமங்களை தனி பஞ்சாயத்துக்களாக அறிவிக்கக்கோரி வழக்கு

2018-07-14@ 01:29:58

சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்தில் மீனவர் பாதுகாப்பு சங்கத்திந் தலைவர் பீட்டர் ராயன் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:
தமிழகத்தில் 13 கடலோர மாவட்டங்கள் உள்ளன. இதில், 608 மீனவ கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் 9.24 லட்சம் மீனவ மக்கள் வசிக்கிறார்கள். கடந்த 1980ல் மண்டல் கமிஷன் மீனவ சமுதாயத்தினரை பட்டியலின மக்களாக பரிந்துரை செய்தது. ஆனால், அந்த பரிந்தை இதுவரை நிறைவேற்றப்படவில்லை. தொடர்ந்து இதுபோன்று மீனவ கிராமங்கள் புறக்கணிக்கப்படுகிறது. இதனால், மீனவ கிராமங்களுக்கு கிடைக்கும் திட்டங்கள் கிடைக்கவில்லை.

எனவே, 608 மீனவ கிராமங்களையும் தனி கிராம பஞ்சாயத்தாக அறிவிக்குமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த மனு நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், பவானி சுப்பராயன் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்சில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வக்கீல் எல்.பி.மவுரியா ஆஜரானார். வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த வழக்கில் ஆகஸ்ட் 17ம் தேதித்குள் தமிழக அரசும், மாநிலத் தேர்தல் ஆணையமும், வார்டு மறு வரையறைக் குழுவும் பதில் தருமாறு உத்தரவிட்டனர்.

மேலும் செய்திகள்

மருத்துவம்

Medical Trends கைகளின் வலி
Like Us on Facebook Dinkaran Daily News
  • damagedvinayr_idoles00

    விநாயகர் சதுர்த்தியையடுத்து பல்வேறு பகுதிகளில் நீர் நிலைகளில் உடைந்து சிதறி கிடைக்கும் விநாயகர் சிலைகள் !

  • delhiaccid_childead

    டெல்லியில் கட்டடம் இடிந்து விபத்து : பெண் உட்பட 4 குழந்தைகள் பலி !

  • dogsketc_123amer

    பனிச்சறுக்கு விளையாடும் உலகின் முதல் நாய் : வியக்க வைத்த பென்னி !

  • thailandbirdsing

    தாய்லாந்தில் நடைபெற்ற பறவைகள் பாடும் போட்டி : ஆயிரக்கணக்கான பறவைகள் பங்கேற்பு

  • presimodhi_madhya123

    மத்தியப் பிரதேசத்தில் பாஜக நிர்வாகிகள் கூட்டம் : பிரதமர் மோடி, அமித்ஷா பங்கேற்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்