SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

வீடு வாங்கி தருவதாக கூறி பண மோசடி செய்தவர் கைது

2018-07-14@ 01:27:53

சென்னை: சென்னை விருகம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் சண்முகவேலு. இவர் எம்ஜிஆர் நகர் காவல் நிலையத்தில் புகார் ஒன்று அளித்தார். அதில், மத்திய அரசின் ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் வீடு ஒதுக்கீடு பெற்று தருவதாக நெசப்பாக்கத்தை சேர்ந்த சங்கர் (38) என்பவர் பொதுமக்களிடம் பல ஆயிரம் பணம் பெற்று மோசடி செய்து வருவதாக கூறியிருந்தார். இந்த புகாரின்படி எம்ஜிஆர் நகர் போலீசார் விசாரணை நடத்தினர்.

அப்போது நெசப்பாக்கத்தை சேர்ந்த சங்கர், மத்திய அரசின் வீடு திட்டத்தின் படிவங்களை போலியாக தயாரித்து அதை பொதுமக்களிடம் விநியோகம் செய்து ஆயிரம் முதல் 5 ஆயிரம் வரை பணம் ெபற்று மோசடி ெசய்தது தெரியவந்தது. இதையடுத்து, சங்கர் மீது நம்பிக்கை மோசடி, ஏமாற்றுதல் ஆகிய இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • philipines_landslidesaccid

    பிலிப்பைன்ஸ் நாட்டில் மீண்டும் நிலச்சரிவு - 29 பேர் உயிரிழப்பு !

  • tanzinaship_accid2121

    டான்ஸானியாவில் படகு விபத்து - உயிரிழந்தோர் எண்ணிக்கை 136 ஆக அதிகரிப்பு

  • iranshooting_festiv0000

    ஈரானில் ராணுவ அணிவகுப்பில் தீவிரவாதிகள் கொடூரத் தாக்குதல்

  • beerfestiv_german123

    ஜெர்மனியில் உலகளவில் பிரசித்தி பெற்ற பியர் திருவிழா - களைகட்டிய உற்சாகம் !

  • china_harrvestingfestiv12

    சீனாவில் களைகட்டிய அறுவடைத் திருவிழா - கோலாகலமாக கொண்டாடப்பட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் !

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்