SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

திருநாவுக்கரசர் பிறந்த நாள் விழா: முன்னாள் எம்பி விஸ்வநாதன் தலைமையில் நலத்திட்ட உதவி

2018-07-14@ 01:27:03

சென்னை: காஞ்சிபுரம் முன்னாள் எம்பி விஸ்வநாதன் தலைமையில் திருநாவுக்கரசர் பிறந்த நாள் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசரின் 69வது பிறந்த நாள் விழா காட்டாங்கொளத்தூரில் உள்ள சிவானந்தா குருகுலத்தில் நேற்று காலை காஞ்சிபுரம் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விஸ்வநாதன் தலைமையில் நடந்தது. விழாவுக்கு, காஞ்சி வடக்கு மாவட்ட தலைவர் வழக்கறிஞர் சுந்தரமூர்த்தி முன்னிலை வகித்தார். விழாவில், சிவானந்தா குருகுலத்தில் தங்கி படிக்கும் 200 மாணவ, மாணவிகளுக்கு மூன்று வேளை உணவு வழங்கப்பட்டது.

தொடர்ந்து, காஞ்சிபுரம், உத்திரமேரூர், செங்கல்பட்டு, மதுராந்தகம், செய்யூர், திருப்போரூர் மற்றும் காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதியில் பல இடங்களில் இனிப்பு வழங்கி சர்வமத பிரார்த்தனை நடத்தப்பட்டது. மேலும் ஆதரவற்றோர், மாற்றுத்திறனாளிகள், முதியோர் இல்லங்கள் மற்றும் மாணவ, மாணவிகளுக்கு நலத்திட்ட உதவிகளை முன்னாள் எம்பி விஸ்வநாதன் வழங்கினார். நிகழ்ச்சிகளில், காங்கிரஸ் விவசாய அணி தலைவர் பவன்குமார், மாநில செய்தி தொடர்பாளர் சொர்ணா சேதுராமன், விஜயகுமார், அண்ணாதுரை, டிராவல்ஸ் ராஜேஷ், டில்லி சுரேஷ், லிங்கேஷ், கண்ணன், துரைராஜ், கெம்பு ஈஷ்வர், நகர தலைவர்கள் தனசேகரன், பாஸ்கர், கண்ணதாசன், ராமச்சந்திரன், பாஸ்கர், சுகுமார், வழக்கறிஞர் சத்தியநாராயணன், கோபால், அருண், செந்தில், மணிகண்டன், விச்சு, வட்டார தலைவர்கள் பன்னீர்செல்வம், அஜய் சி மோகன், நகர தலைவர்கள் தியாகராஜன், புனிதவேல் மற்றும் வடநெமேலி சிவராமன், அச்சுதன், சின்னராஜா, சரவணன், விவசாய அணி மாவட்ட தலைவர் கோதண்டராமன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 21-07-2018

    21-07-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • DryingClothingfestival

    சீனாவில் வருடாந்திர உலர்த்தும் ஆடை திருவிழா: பாரம்பரிய ஆடைகளை நெய்து விழாவை சிறப்பித்த பெண்கள்

  • unmanedbookshopchina

    சீனாவின் அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய மிகப்பெரிய ஆளில்லா புத்தக நிலையம் திறப்பு

  • newyork_steam_explosion

    நீராவி குழாய் வெடித்து சிதறியதில் புகை மண்டலமாக காட்சியளித்த நியூயார்க் நகரம்!

  • Apollo11NeilArmstrong

    நீல் ஆம்ஸ்ட்ராங் சந்திரனின் மேற்பரப்பில் கால்பதித்த தினம் இன்று: அரிய புகைப்படங்களின் தொகுப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்