SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இழப்பீடு பெற பொய் வழக்கு இன்ஸ்பெக்டருக்கு 1 ஆண்டு சிறை

2018-07-14@ 01:26:45

சென்னை: கடலூர் மாவட்டம் புதுச்சத்திரம் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தவர் கண்ணதாசன். இவரிடம் நெய்வேலி பகுதியைச் சேர்ந்த செய்யது முகமது, மல்லிகா பானு, நாகராஜன் ஆகியோர் விபத்து நடந்ததாக பொய் புகார் ஒன்று கொடுத்து, அந்த புகார் மூலம் இன்சூரன்ஸ் நிறுவனத்திடம் இருந்து இழப்பீடு பெறுவதற்காக முயற்சி செய்துள்ளனர். இதற்கு இன்ஸ்பெகடர் கண்ணதாசன் உதவியாக இருந்துள்ளார்.

இது குறித்து சிபிஐ அதிகாரிகளுக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது. பின்னர் அதிகாரிகள் இது குறித்து விசாரணை நடத்தினர். அதில் கண்ணதாசன் பொய் புகார் பதிவு செய்து, இழப்பீடு பெற உதவியாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. வழக்கை விசாரித்த சென்னைசிபிஐ நீதிமன்றம் இன்ஸ்பெக்டர் கண்ணதாசன் உள்பட 4 பேருக்கு தலா ஒரு ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • HodeidahYemen

    ஏமனில் உள்நாட்டுப் போர் தீவிரம்...! ஹூடேடா துறைமுகத்தில் நடந்த சண்டையில் 61 பேர் பலி

  • PizzaGuinnessArgentina

    அர்ஜென்டினாவில் 12 மணி நேரத்தில் 11,287 பீட்சாக்களை தயாரித்து சமையல் கலைஞர்கள் கின்னஸ் சாதனை

  • JordanFloodPetra12

    ஜோர்டானில் வரலாறு காணாத கனமழையால் வெள்ளத்தில் சிக்கி 12 பேர் பலி: மீட்பு பணிகள் தீவிரம்

  • EbolaCongoAfrica200

    தீவிரமடையும் எபோலா வைரஸ்..: ஆப்பிரிக்க நாடான காங்கோவில் 200 பேர் பலி!

  • AssemblyChattisgarElection18

    சத்தீஸ்கர் மாநிலத்தில் பலத்த பாதுகாப்புடன் முதற்கட்ட தேர்தல் வாக்குப்பதிவு: ஆர்வத்துடன் வாக்களிக்கும் மக்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்