SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஓஎம்ஆரில் அரசு மருத்துவமனை விரைவில் தொடங்கப்படும்: ஜெயவர்தன் எம்.பி.,

2018-07-14@ 01:24:07

ஆலந்தூர்: ஓஎம்ஆரில் அரசு மருத்துவமனை விரைவில் தொடங்கப்படும் என்று அதிமுக எம்.பி தெரிவித்துள்ளார். பெருங்குடி 14வது மண்டல மாநகராட்சி பகுதி மக்களின் குறைதீர் முகாம், புழுதிவாக்கத்தில் உள்ள மண்டல அலுவலகத்தில் நேற்று நடந்தது. இதில், தென்சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயவர்தன் கலந்துகொண்டு, பொதுமக்களிடம் புகார் மனுக்களை பெற்றார். அப்போது, மடிப்பாக்கம், உள்ளகரம், புழுதிவாக்கம், பள்ளிக்கரணை போன்ற பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டத்தை விரைந்து முடிக்க வேண்டும், வீடுகளுக்கு மெட்ரோ வாட்டர் இணைப்பு வழங்க வேண்டும், மழைக்காலம் தொடங்க உள்ளதால் மேற்கண்ட பகுதிகளில் உள்ள மழைநீர் கால்வாய்களை தூர்வாரி பராமரிக்க வேண்டும், என பொதுமக்கள் கோரி மனு அளித்தனர்.

முகாமில் ஜெயவர்தன் எம்.பி. கூறுகையில், ‘உள்ளகரம் புழுதிவாக்கம், பள்ளிக்கரணை, பெருங்குடி போன்ற பகுதிகளில் 6 மாதத்திற்குள் பாதாளச் சாக்கடை திட்ட பணிகள் நிறைவுபெறும். மடிப்பாக்கம் பகுதியில் பாதாளச் சாக்கடை திட்ட பணிக்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. டிசம்பர் மாதத்தில் இந்த பணி தொடங்கும். மடிப்பாக்கம், பெருங்குடி, பள்ளிக்கரணை போன்ற பகுதிகளில் உள்ள சமுதாய கூடங்களை சீரமைக்கும் பணி 80 லட்சத்தில் நடந்து வருகிறது. விரைவில் இந்த பணி முடிவடையும். துரைப்பாக்கம் ராஜிவ்காந்தி சாலையில் 100 படுக்கை வசதி கொண்ட அரசு மருத்துவமனை விரைவில் தொடங்கப்படும்,’ என்றார்.முன்னாள் எம்.பி. சிட்லப்பாக்கம் ராஜேந்திரன், முன்னாள் எம்எல்ஏ கே.பி.கந்தன், பெருங்குடி மண்டல உதவி ஆணையர் சரவணபவானந்தம், முன்னாள் கவுன்சிலர்கள் ஜெயச்சந்திரன், பொன்னுசாமி, மணிகண்டன், உமா தியாகராஜன் மற்றும் நலச்சங்க பிரமுகர்கள், மாநகராட்சி அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 18-11-2018

    18-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • 17-11-2018

    17-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • 3rdthiruvanamalai

    திருவண்ணாமலை தீபத்திருவிழாவின் 3ம் நாள் உற்சவம்: பூத வாகனத்தில் சந்திரசேகரர் பவனி

  • pudukottaikaja

    கஜா புயல் எதிரொலி : புதுக்கோட்டையில் பலத்த காற்று மற்றும் கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளின் புகைப்படங்கள்

  • NagaiGajaStorm

    நாகை மாவட்டத்தை கதிகலங்கவைத்த கஜா புயலின் ருத்ரதாண்டவம்: உருக்குலைந்து கிடக்கும் நகரம்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்