SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஆடி வந்தாலே.. ஷாப்பிங் தானே..

2018-07-14@ 01:21:45

ஷாப்பிங் செய்வதற்கு பொறுமை தேவை. அது பெண்களிடம் நிறைய இருப்பதால், அவர்கள் ஷாப்பிங்கில் சிறந்து விளங்குகிறார்கள்..’’ என்கிறது, சமீபத்திய ஆய்வுகள். ஆண்களிடம் பொதுவாக பொறுமை இல்லை என்று ஷாப்பிங்கை பொறுத்தவரை கண்டிப்பாக சொல்லி விடலாம். ஒரு குறிப்பிட்ட பொருளை வாங்க பல கடைகளுக்கு ஏறி இறங்குவது. அப்படி ஏறி இறங்கினாலும் அலுத்துக்கொள்ளாமல், ஒரு முறைக்கு பல முறை விலை விசாரித்து சரியான பொருளை, சரியான விலைக்கு வாங்குவதே 100 சதவீதம்  நிறைவான  ஷாப்பிங்கின் சிறப்பு அம்சம். ஷாப்பிங் என்பது ஒரு மகிழ்ச்சியான வேலை என்பது முக்கியம்; அப்படி முதலில் மனதில் நினைத்து விட்டால், ஷாப்பிங் மிகவும் எளிதான ஒன்றாக மாறிவிடும்.
எளிதாக, பாதுகாப்பாக  ஷாப்பிங் முடிக்க சில டிப்ஸ்கள்:

1. பட்டியல்: ஷாப்பிங் செல்வதற்கு முன்னர் நீங்கள் வாங்க வேண்டிய அல்லது வாங்க விரும்பும் பொருள்களை பட்டியல் போட்டு எடுத்துச் செல்லுங்கள். இது நேரத்தை குறைக்க உதவும். செலவழிக்கும் பணம் நீங்கள் கஷ்டப்பட்டு உழைத்த பணம், நீங்கள் செலவழிக்கும் நேரம் மிகவும் உன்னதமானது. எனவே, அவற்றை வீணாக்கமால் இருக்க ஷாப்பிங் செல்வதற்கு முன் பட்டியலிட்டு செல்லுவது சிறந்தது.
2. பட்ஜெட்: ஷாப்பிங் செல்வதற்கு முன்னர் பட்டியலிடுவது எப்படி முக்கியமோ அதேபோன்று “பட்ஜெட்” போடுவதும் சிறந்த ஷாப்பிங்கிற்கு தேவையானவற்றுள் மிக முக்கியமானதாகும். இதன் மூலம் பணம் வீணாவது தவிர்க்கப்படும். கண்ணில் பார்த்தவற்றை எல்லாம் வாங்கவேண்டும் என்ற எண்ணத்தையும் தவிர்த்து தேவையானவற்றை வாங்கி பணத்தை மிச்சப்படுத்தலாம்.
3.  கிரடிட் கார்டுகள்: பொருட்களை வாங்கும்போது கிரடிட் அல்லது டெபிட் கார்டுகளை பயன்படுத்தாமல் நேரடியாக பணத்தை கொடுத்து பெற்றுக்கொள்ளலாம். இதன்மூலம் பண விரயம் போன்ற சில பிரச்னைகளை தள்ளிவைக்கலாம்.

4. ஷாப்பிங் செய்வதற்கான சிறந்த நேரம்: மக்கள் கூட்டம் அதிகம் இல்லாத நேரங்களை ஷாப்பிங்குக்காக தேர்ந்தெடுங்கள். விசேஷ நாட்களில்  கடைசிக் கட்டத்தில் ஆடைகள் வாங்கச் செல்லாதீர்கள். நல்ல துணிகளெல்லாம் விற்றும் தீர்ந்திருக்கும்.  
5. நேரத்தை நிர்ணயித்தல்: ஒரு பொருளை வாங்க செல்லும்போது குறிப்பிட்ட நேரத்தில் அதனை வாங்கி முடிக்க முயற்சிசெய்யுங்கள். தேவையில்லாமல் பட்டியலில் இல்லாத பொருட்களை எல்லாம் பார்க்கும் எண்ணத்தை தவிர்த்து எதை வாங்குவதற்காக சென்றீர்களோ அதை விற்பனை பிரதிநிதியிடம் கேளுங்கள். அவர்கள் அதில் பல வகைகளை உங்களுக்கு காண்பிப்பார்கள். அதில் இருந்து உங்களுக்கு தேவையானதை  தேர்வு செய்துகொள்ளுங்கள். இதன் மூலம் தேவையில்லாமல் நேரம் வீணாவதை தவிர்க்கலாம்.
6. பசியோடு நோ ஷாப்பிங்:  நீங்கள் சோர்வாக இருக்கும்போது ஷாப்பிங் செல்லாதீர்கள். இதுபோன்ற நேரத்தில் ஷாப்பிங் சென்றால் சரியான பொருட்களை தேர்வு செய்ய முடியாமல் சிரமம் அடைவீர்கள். அதேபோல் பசியுடன்  இருக்கும்போது தொடர்ந்து ஷாப்பிங் செல்ல வேண்டாம். இதனால் உடல் சோர்வு ஏற்படும்.

7. இது தேவையானது தானா: ஷாப்பிங் சென்றால் கண்களில் பட்டதையெல்லாம் வாங்கி குவிக்காமல் ஒவ்வொரு பொருளையும் தேர்வுசெய்யும்போதும் இது நமக்கு தேவையானது தானா, மிகவும் அவசியமானதா என்ற கேள்விகளை உங்களை நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள்.  அப்போது அந்த பொருள் தேவையா என்பதை முடிவு செய்து விடலாம்.
8. கூட்டு சேராதீங்க: ஷாப்பிங் செல்லும்போது தனியாக செல்லுங்கள். சிலர் நண்பர்களுடன் ஷாப்பிங் சென்றால் அவர்கள் விருப்பத்துக்கு ஏற்ப தேர்வு செய்வார்கள். சில நேரங்களில் நமக்கு பிடிக்காவிட்டாலும், விலை அதிகமாக இருந்தாலும் நண்பர்கள் நன்றாக இருக்கிறது என்று கட்டாயப்படுத்துவார்கள். இதனால் நமக்கு பிடிக்காவிட்டாலும் நண்பர்களின் கட்டாயத்திற்காக வாங்க நேரிடும். மேலும் வாங்கும் பொருட்களை நாம் தான் பயன்படுத்தப்போகிறோம். அவர்கள் அல்ல அதனால் நமக்கு பிடித்தவற்றை, நமக்கு பிடித்த விலையில் தேர்வு செய்யவேண்டும் என்றால் தனியாக ஷாப்பிங் செல்லுங்கள்.
9. அவங்க சொன்னாலும்:  கடைகளில் இருக்கும் விற்பனை பிரதிநிதிகள் பொருட்களை விற்பதற்காக மட்டுமே உள்ளார்கள் என்பதை மறந்துவிடக்கூடாது. சிரித்து பேசுகிறார்கள், நண்பர்களை போல் பழகுகிறார்கள் என்ற காரணத்திற்காக பொருட்களை வாங்கவேண்டும் என்று விரும்பாதீர்கள். அவர்களது கடமை பொருட்களை விற்பனை செய்வது தான். எனவே அவர்கள் உங்களிடம் சொன்னாலும் உங்களுக்கு தேவையானதா என்பதை மட்டும் கருத்தில்கொண்டு அதனை வாங்கும் திடத்தோடு இருங்கள்.
10. மலிவு என்றால் யோசியுங்க: கடைக்கு சென்றவுடன் இதை வாங்கிக்கொள்ளலாம், அதை வாங்கிக்கொள்ளலாம் என நினைக்காதீர்கள். நீங்கள் பட்டியலிட்டு வந்த பொருட்களை மட்டும் வாங்குங்கள். உங்கள் பட்டியலில் உள்ள பொருள் எங்கு கிடைக்குமோ அந்த கடைக்கு மட்டும் செல்லுங்கள். ‘ஒரு துணி வாங்கும் பணத்தில், இரண்டு துணிகள்… மூன்று துணிகள்… நான்கு துணிகள்’ என்று ஆசை காட்டினால் மயங்கி விழாதீர்கள். தேவைக்கேற்றதை மட்டும் வாங்குங்கள். தரமான பொருள், நீண்ட நாட்கள் மெருகுடன் இருக்கும் பொருட்களை மட்டுமே வாங்குங்கள்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 21-07-2018

    21-07-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • DryingClothingfestival

    சீனாவில் வருடாந்திர உலர்த்தும் ஆடை திருவிழா: பாரம்பரிய ஆடைகளை நெய்து விழாவை சிறப்பித்த பெண்கள்

  • unmanedbookshopchina

    சீனாவின் அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய மிகப்பெரிய ஆளில்லா புத்தக நிலையம் திறப்பு

  • newyork_steam_explosion

    நீராவி குழாய் வெடித்து சிதறியதில் புகை மண்டலமாக காட்சியளித்த நியூயார்க் நகரம்!

  • Apollo11NeilArmstrong

    நீல் ஆம்ஸ்ட்ராங் சந்திரனின் மேற்பரப்பில் கால்பதித்த தினம் இன்று: அரிய புகைப்படங்களின் தொகுப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்