SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தேர்தல் பொதுக்கூட்டங்களில் தீவிரவாதிகள் சதி: பாக்.கில் வெடிகுண்டு தாக்குதல் வேட்பாளர் உள்பட 90 பேர் பலி

2018-07-14@ 01:20:41

பெஷாவர்: பாகிஸ்தானில் தேர்தல் பொதுக்கூட்டங்கள் நடைபெற்ற இரு வேறு இடங்களில் நேற்று நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதல்களில் வேட்பாளர் உள்பட 90 பேர் உயிரிழந்தனர். மேலும் 180க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர்.பாகிஸ்தானில் வரும் 25ம் தேதி பொதுத்தேர்தல் நடக்கிறது. இதனால்,  அங்கு தேர்தல் பிரசாரம் சூடு பிடித்துள்ளது. இந்த பிரசாரத்தில் இதுவரை இரண்டு இடங்களில் வெடிகுண்டு தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. கடந்த 10ம் தேதி பாகிஸ்தானின் வடமேற்கு பகுதியில் பெஷாவர் நகரில் தலிபான் தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் அவாமி தேசிய கட்சித் தலைவர் ஹரூன் பிலார் மற்றும் 19 பேர் கொல்லப்பட்டனர்.

இதேபோல் இம்மாத துவக்கத்தில் கைபர் பாக்துன்க்வா மாகாணத்தில் தேர்தல் பொதுக்கூட்டத்தில் நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் முத்தாஹிதா மஜ்லிஸ்-இ-அமல் கட்சி உறுப்பினர் உள்ளிட்ட 7 பேர் காயமடைந்தனர்.இந்நிலையில் நேற்று ஒரே நாளில், பலுசிஸ்தான் மற்றும் கைபர் பாக்துன்க்வா என இருவேறு இடங்களில் தேர்தல் பிரசாரத்தின்போது நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதல்களில் வேட்பாளர் உள்பட 90 பேர் உயிரிழந்தனர். மேலும் 180க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர்.பலுசிஸ்தானின் மஸ்தங் பகுதியில் நடைபெற்ற தேர்தல் பொதுக்கூட்டத்தின்போது வெடிகுண்டு வெடித்ததில், பலுசிஸ்தான் அவாமி கட்சித் தலைவர் சிராஜ் ரைசானி உள்ளிட்ட 85 பேர் உயிரிழந்தனர். மேலும், 150க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர்.

இந்த தாக்குதல் நடத்தப்பட்ட சில மணி நேரங்களில் வடக்கு வசிரிஸ்தானில் நடைபெற்ற தேர்தல் பொதுக்கூட்டத்திற்கு அருகில் குண்டு வெடித்ததில் 5 பேர் உயிரிழந்தனர். 30 பேர் காயமடைந்தனர். கைபர் பாக்துன்க்வாவின் முன்னாள் முதல்வரும், ஜமியத் உலமா-இ-இஸ்லாம்-பாசில் தலைவருமான அக்ரம் துரானியை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. பன்னு தொகுதியில் போட்டியிடும் துரானி, பாகிஸ்தான் தெஹ்ரிக்-இ-இன்சாப் கட்சித் தலைவர் இம்ரான்கானை எதிர்த்து போட்டியிடுகிறார். இந்த வெடிகுண்டு தாக்குதலில் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய துரானிக்கு, சிறிய அளவிலான காயம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த தாக்குதல் சம்பவத்திற்கு இம்ரான்கான், தனது டிவிட்டர் பக்கத்தில் கடுமையாக கண்டனம் தெரிவித்துள்ளார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • HodeidahYemen

    ஏமனில் உள்நாட்டுப் போர் தீவிரம்...! ஹூடேடா துறைமுகத்தில் நடந்த சண்டையில் 61 பேர் பலி

  • PizzaGuinnessArgentina

    அர்ஜென்டினாவில் 12 மணி நேரத்தில் 11,287 பீட்சாக்களை தயாரித்து சமையல் கலைஞர்கள் கின்னஸ் சாதனை

  • JordanFloodPetra12

    ஜோர்டானில் வரலாறு காணாத கனமழையால் வெள்ளத்தில் சிக்கி 12 பேர் பலி: மீட்பு பணிகள் தீவிரம்

  • EbolaCongoAfrica200

    தீவிரமடையும் எபோலா வைரஸ்..: ஆப்பிரிக்க நாடான காங்கோவில் 200 பேர் பலி!

  • AssemblyChattisgarElection18

    சத்தீஸ்கர் மாநிலத்தில் பலத்த பாதுகாப்புடன் முதற்கட்ட தேர்தல் வாக்குப்பதிவு: ஆர்வத்துடன் வாக்களிக்கும் மக்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்