SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Satya Summer Offer

டிவிட்டரில் செயல்படாத கணக்குகள் நீக்கம்: 3 லட்சம் பின்தொடர்வோரை இழந்தார் பிரதமர் மோடி

2018-07-14@ 01:19:21

புதுடெல்லி: டிவிட்டரில் செயல்படாத, முடக்கப்பட்ட கணக்குகள் நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, ஒரே நாளில் 3 லட்சம் பின்தொடர்வோரை பிரதமர் மோடி இழந்துள்ளார். செயல்படாத மற்றும் முடக்கப்பட்ட கணக்குகள் நீக்கப்பட உள்ளதாக டிவிட்டர் சமூக தளம் கடந்த வாரம் அறிவித்தது. இதைத்தொடர்ந்து, கணக்குகள் நீக்க நடவடிக்கை தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது, உலக அரசியல் தலைவர்கள், சினிமா, விளையாட்டு உள்ளிட்ட விவிஐபிக்களுக்கு பாதிப்பாக அமைந்துள்ளது. குறிப்பாக, பிரதமர் மோடி ஒரே நாளில் 3 லட்சம் பின்தொடர்வோரை இழந்துள்ளார். டிவிட்டரில் அதிக பின்தொடர்வோரை கொண்ட அரசியல் தலைவர்களில் அமெரிக்க அதிபர் டிரம்ப்பை அடுத்து மோடி 2வது இடத்தில் உள்ளார். செயல்படாத கணக்குகள் நீக்கத்தால், அவரின் தனிப்பட்ட டிவிட்டரில் இருந்து 2.84 லட்சம் பின்தொடர்வோர் வெளியேற்றப்பட்டுள்ளனர். இதனால், மோடியின் பின்தொடர்வோர் எண்ணிக்கை 4.34 கோடியிலிருந்து 4.31 கோடியாக சரிந்துள்ளது.

அடுத்ததாக பிரதமர் அலுவலக டிவிட்டர் கணக்கிலிருந்து 1.40 லட்சம் பின்தொடர்வோர் நீக்கப்பட்டுள்ளனர். காங்கிரஸ் தலைவர் ராகுல் 17,503 பின்தொடர்வோரையும், சசிதரூர் 1.51 லட்சம் பேரையும் இழந்துள்ளனர். வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா 74,132 பின்தொடர்வோரையும், பாஜ தேசிய தலைவர் அமித் ஷா 33,363 பேரையும், டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் 91,555 பேரையும் இழந்துள்ளனர்.உலக தலைவர்களில் அமெரிக்க அதிபர் டிரம்ப் 1 லட்சம் பேரை இழந்து, அவரின் பின்தொடர்வோர் எண்ணிக்கை 5.34 கோடியாக சரிந்துள்ளது. முன்னாள் அதிபர் ஒபாமா 4 லட்சம் பேரை இழந்து, அவரின் பின்தொடர்வோர் எண்ணிக்கை 10.1 கோடியாகி உள்ளது. டிவிட்டர் பின்தொடர்வோர் எண்ணிக்கையை கண்காணித்து வரும் சோஷியல் பிளேட் என்ற இணையதளம் இத்தகவலை வெளியிட்டுள்ளது.


மேலும் செய்திகள்

Satya Summer Offer
Like Us on Facebook Dinkaran Daily News
  • mylai_kabal1

    பங்குனி உத்திர திருவிழா : மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் தேரோட்டம் கோலாகலம்

  • parade_eye1

    புனித பாட்ரிக் தினம் :காணுமிடமெல்லாம் பசுமையை குறிக்கும் பச்சைநிற ஆடையுடன் அணிவகுப்பு

  • newattack

    நியூசிலாந்து மசூதியில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் பரிதாபமாக 8 இந்தியர்கள் பலி

  • siva_muthu12

    காரைக்குடி முத்துமாரியம்மன் கோவில் திருவிழா! : ஏராளமான பக்தர்கள் பால்குடங்களுடன் ஊர்வலம்

  • manohar_cm12

    கோவா முதல்வர் மனோகர் பாரிக்கரின் உடலுக்கு அரசியல் பிரமுகர்கள், பொதுமக்கள் அஞ்சலி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்