SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Satya Summer Offer

ஊழல் வழக்கில் 10 ஆண்டு சிறை நவாஸ் ஷெரீப் கைது

2018-07-14@ 01:18:17

லாகூர்: ஊழல் வழக்கில் 10 ஆண்டு சிறை தண்டனை பெற்றுள்ள பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப், அவருடைய மகள் மரியமும் தண்டனையை ஏற்பதற்காக லாகூர் வந்தனர்.  இதையொட்டி முன்னெச்சரிக்கையாக லாகூரில் 10,000 போலீசார் குவிக்கப்பட்டனர்.  பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப். இவர் பிரதமராக இருந்தபோது ஊழல் பணத்தில் லண்டன் அவென்பீல்டு பகுதியில் 4 அடுக்குமாடி குடியிருப்பு வாங்கியதாக பனாமா பேப்பர்ஸ் வெளிப்படுத்தியது. இது தொடர்பான புகாரின் பேரில் விசாரணை நடத்திய பாகிஸ்தான் பொறுப்புடமை நீதிமன்றம், கடந்த வாரம் நவாசுக்கு 10 ஆண்டு சிறைதண்டனையும், அவரது மகள் மரியத்துக்கு 7 ஆண்டு சிறை தண்டனையும் விதித்தது. தண்டனை அறிவிக்கப்பட்டபோது அவர்கள் லண்டனில் இருந்தனர். இந்த நிலையில் நேற்று பாகிஸ்தான் திரும்பிய நவாசையும் அவரது மகள் மரியத்தையும் கைது செய்ய போலீசார் திட்டமிட்டனர். இதற்காக லாகூரில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் வகையில் 10,000 போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருந்தனர். நவாசின் ஆதரவாளர்கள் லாகூர் விமான நிலையத்திற்கு வருவதை தடுக்கும் வகையில் அந்த சாலைகள் மூடப்பட்டிருந்தன. லாகூரில் இன்டர்நெட் சேவையும் முடக்கப்பட்டது. லண்டனில் இருந்து நேற்றிரவு 9.15க்கு எதிகாட் ஏர்வேஸ் விமானத்தில் லாகூர் அல்லமா இக்பால் சர்வதேச விமான நிலையத்தில் ர் நவாசும், அவரது மகள் மரியமும் வந்திறங்கினர், அவர்களை போலீசார் பலத்த பாதுகாப்புடன் போலீசார் அழைத்துச் சென்றனர். அவர்கள் இஸ்லாமாபாத்துக்கு ஹெலிகாப்டர் மூலம் கொண்டு செல்லப்பட்டு ராவல்பிண்டி அடியலா சிறையில் அடைக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக பாகிஸ்தான் வரும் முன் லண்டன் விமான நிலையத்தில் செய்திதாளுக்கு பேட்டியளித்த நவாஸ் ஷெரீப் கூறியதாவது: 10 ஆண்டு சிறைதண்டனை விதிக்கப்பட்டுள்ள நான் நேராக சிறைக்கு கொண்டு செல்லப்படுவேன். இந்த சிறை தண்டனையை பாகிஸ்தான் மக்களுக்காக ஏற்கிறேன். என் மீது எந்த வழக்கும் இல்லை. பனாமா ஊழல் என வழக்கு தொடர்ந்ததே என் மீது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கைக்காகத்தான். ஆழமான ஜனநாயகம் கொண்ட நாடாக பாகிஸ்தானை மாற்ற விரும்புவதால் என்னை தொலைவில் வைக்க விரும்புகிறார்கள். பாகிஸ்தான் மக்களுக்காக இந்த தியாகத்தை செய்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்வீர்களா என நிருபர் கேட்டதற்கு `தான் சிறை செல்ல தயாராக இருப்பதாக’ தெரிவித்தார்.மகள் மரியம் கூறுகையில், `‘சிறை செல்வது என்பது என்வாழ்க்கையில் மிக கடினமான முடிவுதான். அதிலும் என் தாயார் உயிருக்கு போராடும் நிலையில் தேசிய கடமையாக கருதி இந்த முக்கிய பயணத்தை மேற்கொள்கிறேன்’’ என்றார். முன்னதாக நவாஸ் ஷெரீப்பின் தாய் சமீம் அக்தர் கூறுகையில், ‘‘நான் அவர்களை சிறைக்கு கொண்டு செல்ல அனுமதிக்க மாட்டேன். அவர்கள் சிறைக்கு அனுப்பப்பட்டால் அவர்களுடன் நானும் சிறை ெசல்வேன்’’ என்றார்.

நவாஸ் பேரன்கள் லண்டனில் கைது
பிரிட்டன் தலைநகர் லண்டனின் அவென்பீல்டு பகுதியில் நவாஸ் ஷெரீப்புக்கு சொந்தமான 4 அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளன. இவற்றை ஊழல் பணத்தில் வாங்கியதாக குற்றச்சாட்டப்படுகிறது.  இந்நிலையில், இந்த வீட்டின் முன்பு முகாமிட்டிருந்த பாகிஸ்தான் முஸ்லிம் லீக் நவாஸ் கட்சியின் எதிர்ப்பாளர்களுக்கும், நவாஷின் பேரன்கள் ஜூனைத் சப்தார், ஜாகாரியா ஆகியோர் இடையே நேற்று முன்தினம் திடீர் என மோதல் ஏற்பட்டது. இது கைகலப்பாக மாறியது. அப்போது ஜூனைத் சப்தார் எதிர்தரப்பை சேர்ந்த ஒரு இளைஞரை தாக்கினார்.
இது பற்றிய புகாரின் பேரில் ஜூனைத் சப்தார், ஜாகாரியாவை  லண்டன் போலீசார் கைது செய்தனர். இது தொடர்பாக மரியம் நவாசின் மகன் கூறுகையில், ‘‘வீட்டின் முன்பு குவிந்திருந்த எங்கள் கட்சியின் எதிர்ப்பாளர்கள் என்மீது எச்சில் துப்ப முயன்றபடி என்னை தாக்க முயன்றனர். மேலும் குடை ஒன்றையும் என்மீது வீசினர்’’ என்றார்.


மேலும் செய்திகள்

Satya Summer Offer
Like Us on Facebook Dinkaran Daily News
 • mylai_kabal1

  பங்குனி உத்திர திருவிழா : மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் தேரோட்டம் கோலாகலம்

 • parade_eye1

  புனித பாட்ரிக் தினம் :காணுமிடமெல்லாம் பசுமையை குறிக்கும் பச்சைநிற ஆடையுடன் அணிவகுப்பு

 • newattack

  நியூசிலாந்து மசூதியில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் பரிதாபமாக 8 இந்தியர்கள் பலி

 • siva_muthu12

  காரைக்குடி முத்துமாரியம்மன் கோவில் திருவிழா! : ஏராளமான பக்தர்கள் பால்குடங்களுடன் ஊர்வலம்

 • manohar_cm12

  கோவா முதல்வர் மனோகர் பாரிக்கரின் உடலுக்கு அரசியல் பிரமுகர்கள், பொதுமக்கள் அஞ்சலி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்