SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

திருச்சி விமான நிலையத்தில் 2 கிலோ தங்கத்தை தூளாக்கி பசையுடன் கலந்து கடத்தல்

2018-07-14@ 01:17:17

திருச்சி: திருச்சி விமான நிலையத்தில் சுமார் 2 கிலோ தங்கத்தை தூளாக்கி பசையில் கலந்து கடத்தி கொண்டு வந்த சென்னையை 4 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். இவர்களிடமிருந்து 55.74 லட்சம் மதிப்புடைய தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. துபாயில் இருந்து ஏர் இண்டியா எக்ஸ்பிரஸ் விமானம் நேற்று முன்தினம் அதிகாலை 6 மணிக்கு திருச்சிக்கு வந்தது. அதில் வந்த பயணிகளின் உடமைகளை வான் நுண்ணறிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதில் 4 வாலிபர்கள் பேன்ட் பாக்கெட்டுகளில் தங்கம் கடத்தி வந்தது தெரியவந்தது. 4 பேரும் தங்களது கால்களில் பசைபோல் ஒரு திரவத்தை பிளாஸ்டிக் பேப்பரில் பேக் செய்து, டேப்பை ஒட்டி கொண்டு வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த பசை பாக்கெட்டுகளில் தங்க தூள் கலந்திருந்தது தெரியவந்தது. இதை பார்த்ததும் அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் தங்க கட்டிகளையும், தங்க தூள் பேஸ்டுகளையும் பறிமுதல் செய்தனர். விசாரணையில் அவர்கள், சென்னையை சேர்ந்த நிஜாம் மைதீன்(35), முகமது ஆசிக்(33), மசார் உசேன்(29), அப்துல் ஹரீஸ்(30) என்பது தெரியவந்தது. இதில் நிஜாமிடமிருந்து 356 கிராம் தங்க தூள், 70 கிராம் தங்க கட்டி, மசாரிடமிருந்து 400 கிராம் தங்க தூள், 70 கிராம் தங்க கட்டி, முகமது ஆசிக்கிடமிருந்து 467 கிராம் தங்க தூள், 69 கிராம் தங்க கட்டி, அப்துல் ஹரிசிடமிருந்து 329 கிராம் தங்க தூள், 70 கிராம் தங்க கட்டி பறிமுதல் செய்யப்பட்டது. 4 பேரிடமும் மொத்தம் 1 கிலோ 835 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இவற்றின் மொத்த மதிப்பு 55.74 லட்சம்.

இவர்கள் 4 பேரும் தங்கத்தை தூளாக மாற்றி உள்ளனர். பின்னர் அதை சுவரொட்டி ஒட்ட பயன்படுத்தும் பசையில் கலந்து பிளாஸ்டிக் பேப்பரில் பேக் செய்து, அந்த பிளாஸ்டிக் பேக்கை 4 பேரும் தங்களது கால்களில் டேப்பால் ஒட்டி கடத்தி வந்தது விசாரணையில் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து பாக்கெட்டுகளில் இருந்து தங்க தூளையும், பசையையும் பிரித்தெடுக்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டனர். நேற்று முன்தினம் காலை 6 மணிக்கு நேற்று அதிகாலை 3 வரையில் கிட்டத்தட்ட 19 மணி நேரம் தங்கம் பிரித்ெதடுக்கப்பட்டது. பின்னர், 4 பேரையும் அதிகாரிகள் கைது செய்தனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • yemen_displace_people

    பல்வேறு பகுதியில் இருந்து ஏமன் தலைநகருக்கு இடம்பெயரும் மக்கள்: உயிர்வாழ போராடும் காட்சிகள்!

  • thailand_boys_prayer

    தாய்லாந்து குகையில் மீட்கப்பட்ட சிறுவர்கள், அதிர்ஷ்ட வசமாக உயிர் தப்பியதை எண்ணி பிரார்த்தனை!

  • Chinesestudentsskillssummer

    திறமைகளை வளர்ப்பது மூலம் கோடை விடுமுறையை செலவிடுகின்றனர் சீன மாணவர்கள்

  • watermelonasrita

    தமது வயிற்றில் அதிக தர்பூசணியை வைத்து தாமே வெட்டி சாதனை படைத்த அஸ்ரிதா ஃபர்மேன்

  • harry_megan_mandela

    லண்டனில் நெல்சன் மண்டேலா கண்காட்சிக்கு வருகை புரிந்த இளவரசர் ஹாரி மற்றும் மேகன் மார்க்லே!: புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்