SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கட்டாய பணி ஓய்வு ரமண தீட்சிதலு புகாரை விசாரிக்க மத்திய சட்ட ஆணையம் மறுப்பு

2018-07-14@ 01:08:11

திருமலை:  திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பணி புரிந்து வந்த தலைமை அர்ச்சகர் ரமண தீட்சிதலு உட்பட 3 வம்ச பாரம்பரிய அர்ச்சகர்களுக்கு 65 வயதை எட்டி விட்டதாக கூறி, தேவஸ்தான அறங்காவலர் குழு கடந்த மே 16ம் தேதி கட்டாய ஓய்வு அளித்தது. இதையடுத்து, தேவஸ்தானம் மீது ரமணதீட்சிதலு பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார்.

மத்திய சட்ட ஆணையத்துக்கும் ரமண தீட்சிதலு புகார் அளித்தார். அதில், ‘ஏழுமலையான் கோயிலில் சரியான முறையில் ஆகம விதிப்படி பூஜை நடக்கவில்லை’ என குற்றம்சாட்டினார். இதை பரிசீலித்த மத்திய சட்ட ஆணையம், இந்த புகார்களை விசாரிக்கும் அதிகாரம் தனக்கு இல்லை என கூறி, அவருடைய புகாரை நிராகரித்து விட்டது. இது பற்றி தேவஸ்தானத்திடமும், மாநில அரசிடமும் முறையிடும்படி மத்திய சட்ட ஆணைய செயலாளர் பட்டக் தனது கடிதத்தில் கூறியுள்ளார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 19-02-2019

    19-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • artexpo

    சென்னையில் ஓவியர் சீனிவாசலு நினைவாக கலானுபாவா ஓவிய கண்காட்சி

  • modimeetmaurico

    பிரதமர் மோடியுடன் அர்ஜென்டினா அதிபர் மவுரிசியோ மக்ரி சந்திப்பு : முக்கிய ஒப்பந்தங்கள் குறித்து பேச்சுவார்த்தை

  • Switzerlandhorse

    சுவிட்சர்லாந்தில் உற்சாகத்துடன் களைகட்டிய குளிர்கால ஹார்ஸ் ரேஸ் போட்டி

  • germanyrecord

    ஜெர்மனியில் கார்ட்டூன் கதாப்பாத்திரம் போன்று வேடமிட்டு 2,762 பேர் ஒரே இடத்தில் நடனமாடி சாதனை

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்