SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தமிழகம், ஆந்திராவை சேர்ந்த மீனவர்கள் மோதல் 17 பேர் படுகாயம்

2018-07-14@ 01:06:36

திருமலை: நாகை, ஆந்திர மீனவர்களிடையே ஏற்பட்ட கடும் மோதலில் இருதரப்பை சேர்ந்த 17 பேர் படுகாயம் அடைந்தனர்.  ஆந்திர மாநிலம், நெல்லூர் மாவட்டம், சென்னபாளையம் மீனவ கிராமத்தை சேர்ந்த மீனவர்கள் நேற்று முன்தினம் மீன் பிடிப்பதற்காக கடலுக்கு சென்றனர். அப்போது, நாகை மாவட்டத்தை சேர்ந்த மீனவர்கள் அவ்வழியே விசை படகில் சென்றபோது, ஆந்திர மீனவர்களின் வலை சேதமானது.

இதையடுத்து சென்னபாளையம் மீனவர்கள், 20 நாகை மீனவர்கள் மற்றும் அவர்களின் 3 படகுகளை சிறைபிடித்தனர். இதனால் இரு தரப்பினர் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இருதரப்பினரும் மாறிமாறி தாக்கிக்கொண்டதில் நாகை மீனவர்கள் 7 பேரும், சென்னபாளையம் மீனவர்கள் 10 பேரும் காயமடைந்தனர். போலீசார் இவர்களை மீட்டு,  அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இந்த மோதல் சம்பவத்தால் சென்னபாளையம் மீனவ கிராமத்தில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து காவலி ரூரல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • artexpo

    சென்னையில் ஓவியர் சீனிவாசலு நினைவாக கலானுபாவா ஓவிய கண்காட்சி

  • modimeetmaurico

    பிரதமர் மோடியுடன் அர்ஜென்டினா அதிபர் மவுரிசியோ மக்ரி சந்திப்பு : முக்கிய ஒப்பந்தங்கள் குறித்து பேச்சுவார்த்தை

  • Switzerlandhorse

    சுவிட்சர்லாந்தில் உற்சாகத்துடன் களைகட்டிய குளிர்கால ஹார்ஸ் ரேஸ் போட்டி

  • germanyrecord

    ஜெர்மனியில் கார்ட்டூன் கதாப்பாத்திரம் போன்று வேடமிட்டு 2,762 பேர் ஒரே இடத்தில் நடனமாடி சாதனை

  • omancyclerace

    ஓமனில் நடைபெற்ற உலக வாகையர் சைக்கிள் பந்தயத்தில் கஜகஸ்தான் வீரர் வெற்றி!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்