SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Satya Summer Offer

பாஜ தலைவர் ஷாநவாஸ் உசேன் மீது பலாத்கார புகாரில் எப்ஐஆர் பதிவு செய்ய ஐகோர்ட் தடை

2018-07-14@ 01:05:58

புதுடெல்லி: பாஜ மூத்த தலைவர்களில் ஒருவரான ஷாநவாஸ் உசேன் மீது  கடந்த ஜனவரியில் டெல்லியைச் சேர்ந்த பெண் ஒருவர் பலாத்கார புகார் அளித்தார்.  ஜூலை 7ம் தேதி பெருநகர நடுவர் நீதிமன்றம், ஷாநவாஸ் உசேன் மீது முதல் தகவல் அறிக்கை பதிய போலீசாருக்கு உத்தரவிட்டது.  இதை எதிர்த்து ஷாநவாஸ் உசேன், அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு நிராகரிக்கப்பட்டதால், உயர் நீதிமன்றத்தை நாடினார். அவரது சார்பில் மூத்த வழக்கறிஞர் சித்தார்த் லூத்ரா வாதாடுகையில், ‘‘ உசேனின் சகோதரருக்கும் புகார் கொடுத்த பெண்ணுக்கும் இடையே பிரச்னை இருந்துள்ளது. இந்த மோதலில் உசேனையும் சிக்க வைக்க திட்டமிட்டு இந்த பொய் புகாரை அந்த பெண் கொடுத்துள்ளார்’’ என்றார்.

இந்த மனு, நீதிபதி ஏ.கே. பாதக் முன்பாக நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது பாதிக்கப்பட்டதாகக் கூறும் பெண்ணுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தர விட்ட நீதிபதி,  மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தின்  உத்தரவுக்கு அடுத்த விசாரணை தேதி வரை தடை விதிக்கப்படுகிறது என்றார்.


மேலும் செய்திகள்

Satya Summer Offer
Like Us on Facebook Dinkaran Daily News
  • mylai_kabal1

    பங்குனி உத்திர திருவிழா : மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் தேரோட்டம் கோலாகலம்

  • parade_eye1

    புனித பாட்ரிக் தினம் :காணுமிடமெல்லாம் பசுமையை குறிக்கும் பச்சைநிற ஆடையுடன் அணிவகுப்பு

  • newattack

    நியூசிலாந்து மசூதியில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் பரிதாபமாக 8 இந்தியர்கள் பலி

  • siva_muthu12

    காரைக்குடி முத்துமாரியம்மன் கோவில் திருவிழா! : ஏராளமான பக்தர்கள் பால்குடங்களுடன் ஊர்வலம்

  • manohar_cm12

    கோவா முதல்வர் மனோகர் பாரிக்கரின் உடலுக்கு அரசியல் பிரமுகர்கள், பொதுமக்கள் அஞ்சலி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்