SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஸ்டெர்லைட் ஆலை வழக்கில் எதிர் மனுதாரராக சேர்க்க வைகோ மனு தாக்கல்

2018-07-14@ 01:05:03

புதுடெல்லி: ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான வழக்கில் தன்னை எதிர் மனுதாரராக சேர்க்கும்படி தேசிய பசுமை தீர்ப்பாயத்தில்  வைகோ மனு தாக்கல் செய்துள்ளார். தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள் மீது போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டனர். பலர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதையடுத்து, ஸ்டெர்லைட் ஆலையை தமிழக அரசு மூடியது.  இதை எதிர்த்து ஸ்டெர்லைட் ஆலையை நடத்தும் வேதாந்தா நிறுவனத்தின் சார்பாக தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதில், ‘ஸ்டெர்லைட் ஆலைக்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் தடை எதையும் விதிக்கவில்லை.

இந்த நிலையில், ஆலையின்  மின்சார சப்ளை, தண்ணீர் இணைப்புகளை துண்டித்து, ஆலையை மூடி தமிழக அரசு சீல் வைத்துள்ளது. இதனால், ஆலையின் பராமரிப்பு பணி முற்றிலும் முடங்கி உள்ளது. நாங்க ஆலையை திறக்க இடைக்கால அனுமதி வழங்க வேண்டும்’ என கூறப்பட்டுள்ளது. இதை நிராகரித்த தீர்ப்பாயம், இந்த மனுவுக்கு 10 நாட்களில் பதிலளிக்கும்படி தமிழக அரசுக்கு உத்தரவிட்டது.  இந்நிலையில், இந்த வழக்கில் தன்ைனயும் ஒரு எதிர் மனுதாரராக சேர்க்கும்படி கோரி தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நேற்று புதிய மனு தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கு விசாரணை வரும் 18ம் தேதி மீண்டும் நடக்கிறது. அப்போது, வைகோ ஆஜராவார் என எதிர்பார்க்கப்படுகிறது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 19-01-2019

    19-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • ChillaiKalanKashmir

    கடுமையான பனிப்பொழிவால் வெண் நிற ஆடை போர்த்தியது போல் காட்சியளிக்கும் காஷ்மீர்: கண்களை குளிர்விக்கும் புகைப்படங்கள்

  • bombblastcolombia

    கொலம்பியாவில் கார் வெடிகுண்டு வெடித்து விபத்து: 9 பேர் உயிரிழந்த பரிதாபம்!

  • chinafiredrone

    மின்கம்பிகளில் தொங்கும் குப்பைகளை அழிக்க தீயை உமிழும் ட்ரோன் சீனாவில் கண்டுபிடிப்பு!

  • horse_apain12

    விலங்குகளை சுத்தப்படுத்தும் திருவிழா : நெருப்புக்குள் குதிரைகளை செலுத்தும் ஸ்பெயின் மக்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்