SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

புதுவை நியமன எம்எல்ஏ.க்கள் விவகாரம்: 19ல் இறுதி விசாரணை உச்ச நீதிமன்றம் உத்தரவு

2018-07-14@ 01:04:08

புதுடெல்லி:  புதுவை பாஜ தலைவர் சாமிநாதன், செல்வ கணபதி மற்றும் சங்கர் ஆகியோரை நியமன எம்எல்ஏ.க்களாக நியமித்து, ஆளுநர் கிரண்பேடி கடந்த ஆண்டு ஜூனில் அவர்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். ஆனால், யூனியன் பிரதேச அரசியல் சட்டவிதிகளின்படி இவர்களின் நியமனத்தை சபாநாயகர் வைத்தியலிங்கம் அங்கீகரிக்க மறுத்து விட்டார்.இதுதொடர்பான வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், 3 பேரின்  நியமனம் செல்லும் என உத்தரவிட்டது.

புதுவை சட்டப்பேரவை உறுப்பினரும், முதல்வரின் நாடாளுமன்ற செயலருமான லட்சுமி நாராயணன், இந்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். நீதிபதிகள் சிக்ரி, அசோக் பூஷண் அமர்வு இதை கடந்த மே மாதம் விசாரித்தது.  இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், “மூன்று நியமன எம்எல்ஏ.க்கள் விவகாரத்தில் வரும் 19ம் தேதி இறுதி விசாரணை நடத்தப்படும்’’ என அறிவித்தனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • lisbon_tramp11

    லிஸ்பனில் டிராம் ரயில் தடம் புரண்டு விபத்து : 28 பேர் காயம்

  • 15-12-2018

    15-12-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • AmazonIllegalMining

    அமேசான் மழைக்காடுகளில் தங்கம் எடுக்க சட்டவிரோதமாக தோண்டப்படும் சுரங்கங்கள்..: போலீசார் தீவிர சோதனை

  • chinasnowfall

    கடும் பனிப்பொழிவால் வெண் போர்வை போர்த்தியது போல காணப்படும் சீனாவின் கண்கவர் புகைப்படங்கள்

  • hungary_policepadhuga11

    புதிய தொழிலாளர் சட்டத்தை அமல்படுத்தியதை கண்டித்து ஆயிரக்கணக்கான ஹங்கேரியர்கள் போராட்டம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்