SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மாவட்ட நிர்வாகம், உள்ளூர் காவல்துறையின் அனுமதி பெற்ற பிறகே பேரிடர் பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும் : மு.க.ஸ்டாலின் கோரிக்கை

2018-07-14@ 01:00:16

சென்னை: “மாவட்ட நிர்வாகம் மற்றும் உள்ளூர் காவல்துறையின் அனுமதி பெற்ற பிறகே பேரிடர் பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும்” என்று மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார். திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கோவை அருகில் தொண்டாமுத்தூரில் உள்ள தனியார் கலைக் கல்லூரியில் நடத்தப்பட்ட தேசிய பேரிடர் மேலாண்மைக் குழு பயிற்சியின் போது, பி.பி.ஏ படிக்கும் இரண்டாம் ஆண்டு கல்லூரி மாணவி லோகேஸ்வரி மரணமடைந்த செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்தேன். மாணவியின் மரணத்திற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்ளும் அதே வேளையில், மகளை இழந்து வாடும் பெற்றோருக்கும், உடன் பயிலும் மாணவியர்க்கும்  எனது ஆழ்ந்த ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். பேரிடர் பயிற்சியை மாணவ,மாணவியர்க்கு கற்றுக் கொடுக்கும் போது கடைபிடிக்கப்பட வேண்டிய பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மீது பயிற்சியாளரோ அல்லது சம்பந்தப்பட்ட கல்லூரி நிர்வாகமோ போதிய கவனம் செலுத்தவில்லை என்பது வேதனையளிக்கிறது.

குறிப்பாக, இரண்டாவது மாடியிலிருந்து குதிக்க வைக்கும் போது இவ்வளவு கவனக்குறைவாகவும், மெத்தனமாகவும் பயிற்சியாளர் நடந்து கொண்டது மிகவும் கண்டனத்திற்குரியது. பேரிடர் பயிற்சி என்று வரும்போது முதலில் அதில் பங்கேற்போரின் பாதுகாப்புகள் உறுதி செய்யப்பட வேண்டும் என்பதை கல்வித்துறையோ அல்லது மாவட்ட நிர்வாகமோ கவனிக்கத் தவறியதும், அதற்கான வழிகாட்டுதலை வழங்கத் தவறியதும் இதுபோன்ற உயிரிழப்பிற்கு காரணமாக அமைந்துள்ளது. ஆகவே, பேரிடர் பயிற்சி, நன்கு அனுபவம் பெற்றவர்கள் முன்னிலையில் நடக்குமாறும் பார்த்துக் கொள்ள வேண்டும். மாவட்ட நிர்வாகம் மற்றும் உள்ளூர் காவல்துறையின் அனுமதி பெற்ற பிறகே இதுபோன்ற பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்று அனைத்து அரசுத்  துறைகளுக்கும் தமிழக அரசு உரிய உத்தரவை உடனடியாகப்  பிறப்பிக்க வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

சர்வதேச தடகளத்தில் தங்கம் இந்திய வீராங்கனைக்கு வாழ்த்து

சர்வதேச தடகள 400 மீட்டர் ஓட்டப்பந்தய போட்டியில் தங்கம் வென்ற இந்திய வீராங்கனை ஹிமா தாஸ்க்கு திமுக செயல் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:
உலக தடகள ஜூனியர் பிரிவில் தங்கம் வெல்லும் முதல் இந்தியர் என்ற பெருமையை வென்ற தடகள வீராங்கனை ஹிமா தாஸ்க்கு என்னுடைய நெஞ்சார்ந்த வாழ்த்துக்களை தெரிவிப்பதோடு, வாழ்வில் எல்லாவிதமான சிறப்புகளையும் பெற என் பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • artexpo

  சென்னையில் ஓவியர் சீனிவாசலு நினைவாக கலானுபாவா ஓவிய கண்காட்சி

 • modimeetmaurico

  பிரதமர் மோடியுடன் அர்ஜென்டினா அதிபர் மவுரிசியோ மக்ரி சந்திப்பு : முக்கிய ஒப்பந்தங்கள் குறித்து பேச்சுவார்த்தை

 • Switzerlandhorse

  சுவிட்சர்லாந்தில் உற்சாகத்துடன் களைகட்டிய குளிர்கால ஹார்ஸ் ரேஸ் போட்டி

 • germanyrecord

  ஜெர்மனியில் கார்ட்டூன் கதாப்பாத்திரம் போன்று வேடமிட்டு 2,762 பேர் ஒரே இடத்தில் நடனமாடி சாதனை

 • omancyclerace

  ஓமனில் நடைபெற்ற உலக வாகையர் சைக்கிள் பந்தயத்தில் கஜகஸ்தான் வீரர் வெற்றி!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்