SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

69வது பிறந்தநாள் கொண்டாட்டம்: திருநாவுக்கரசருக்கு ராகுல் வாழ்த்து

2018-07-14@ 00:58:43

சென்னை: திருநாவுக்கரசர் பிறந்த நாளை முன்னிட்டு, அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி மற்றும் பல்வேறு கட்சி தலைவர்கள் அவருக்கு தொலைபேசி மூலம் வாழ்த்து தெரிவித்தனர்.  தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் நேற்று தனது 69வது பிறந்த நாளை கொண்டாடினார். இவர், சென்னையில் இல்லாததால் காங்கிரசார் கேக் வெட்டி நலத்திட்ட உதவிகள் வழங்கி பல்வேறு இடங்களில் கொண்டாடினர். அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, தொலைபேசி மூலம் திருநாவுக்கரசருக்கு வாழ்த்து தெரிவித்தார்.  அதேபோன்று, கேரள மாநில முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி, ஆந்திர மாநில காங்கிரஸ் தலைவர் ரகுவீர ரெட்டி மற்றும் கனிமொழி எம்பி., தமிழக பாஜ தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், தமாகா தலைவர் ஜி.கே.வாசன், துணை தலைவர் ஞானதேசிகன், எஸ்டிபிஐ கட்சி தேசிய துணை தலைவர் தெகலான் பாகவி, சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் உள்ளிட்ட பல்வேறு கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

அகில இந்திய காங்கிரஸ் செயலாளர்கள் டாக்டர் செல்லக்குமார், மாணிக்கம் தாகூர், சி.டி.மெய்யப்பன், சுதர்சன நாச்சியப்பன், முன்னாள் தலைவர் கே.வி.தங்கபாலு, முன்னாள் எம்பி விஸ்வநாதன், எம்எல்ஏக்கள் விஜயதரணி, பிரின்ஸ், ராஜேஷ்குமார், கணேஷ்,  காளிமுத்து மற்றும் எஸ்சி துறை தலைவர் செல்வப்பெருந்தகை உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் மாநில நிர்வாகிகள், மாவட்ட தலைவர்கள் தொலைபேசி மூலம் திருநாவுக்கரசருக்கு வாழ்த்து தெரிவித்தனர். சென்னை சத்தியமூர்த்திபவனில் திருநாவுக்கரசர் பிறந்த நாள் விழா காங்கிரஸ் மூத்த தலைவர் குமரிஅனந்தன் தலைமையில் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. அதை தொடர்ந்து ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகளை முன்னாள் எம்பி ஜே.எம்.ஆரூண் வழங்கினார். நிகழ்ச்சியில், முன்னாள் எம்பி ராணி, மாநில பொதுச் செயலாளர் சிரஞ்சீவி, வக்கீல் செல்வம், தணிகாச்சலம், கீழானூர் ராஜேந்திரன், தாமோதரன், மீனவரணி தலைவர் கஜநாதன், இளைஞர் காங்கிரஸ் முதன்மை பொதுச் செயலாளர் ஊர்வசி அமிர்தராஜ், மாவட்ட தலைவர்கள் எம்.எஸ்.திரவியம், சிவ.ராஜசேகரன், வீரபாண்டியன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 18-11-2018

    18-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • 17-11-2018

    17-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • 3rdthiruvanamalai

    திருவண்ணாமலை தீபத்திருவிழாவின் 3ம் நாள் உற்சவம்: பூத வாகனத்தில் சந்திரசேகரர் பவனி

  • pudukottaikaja

    கஜா புயல் எதிரொலி : புதுக்கோட்டையில் பலத்த காற்று மற்றும் கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளின் புகைப்படங்கள்

  • NagaiGajaStorm

    நாகை மாவட்டத்தை கதிகலங்கவைத்த கஜா புயலின் ருத்ரதாண்டவம்: உருக்குலைந்து கிடக்கும் நகரம்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்