SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வெளி மாநிலங்களில் இருந்து வரும் மீன்களில் பார்மலின் கலந்தால் கடும் நடவடிக்கை : அமைச்சர் ஜெயக்குமார் எச்சரிக்கை

2018-07-14@ 00:58:22

சென்னை: வெளி மாநிலங்களில் இருந்து வரும்  மீன்களில் பார்மலின் கலந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டால் கடுமையான  நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் ஜெயக்குமார் எச்சரித்துள்ளார். பொதுமக்கள் உணவுக்காக வாங்கும் மீன்கள் கெட்டுப்போகாமல் இருப்பதற்காக பார்மலின் கலந்து விற்கப்படுவதாக தகவல் பரவியது. இதையடுத்து மீன் விற்பனையும் குறைந்துள்ளது. இதுபோன்ற குற்றச்சாட்டுகளை தொடர்ந்து, மீன்வளத்துறை அதிகாரிகளுடன் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் சென்னை, தலைமை செயலகத்தில் நேற்று ஆலோசனை நடத்தினார். கூட்டம் முடிந்த பிறகு அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்களிடம் கூறியதாவது: மீன்கள் கெட்டுப்போகாமல் இருப்பதற்காக பார்மலின் கலக்கப்படுவதாக தவறான கருத்து வதந்தியாக பொதுமக்களிடம் பரப்பப்படுகிறது. முன்பு கடலில் மீன்கள் பிடிக்கப்பட்டால் உடனடியாக கரைக்கு வந்து விடும். தற்போது விசை படகுகள் 15 முதல் 20 நாட்களுக்கு பிறகே கரைக்கு வருகிறது. அந்த படகுகளில் மைனஸ் 5 டிகிரி முதல் 10 டிகிரி வரை பாதுகாக்கக்கூடிய அளவிற்கு சாதனங்கள் உள்ளன. அதனால் பார்மலின் போட்டு பாதுகாக்க வேண்டிய அவசியம் இல்லை.

முன்பு ஒரு மாவட்டத்தில் இருந்து வேறு மாவட்டங்களுக்கு கொண்டு செல்ல ஐஸ் பாக்ஸ் பயன்படுத்தப்பட்டது. தற்போது 15 நாட்கள் வரை மீன்கள் பாதுகாக்க கூடிய வகையில் ரெப்ரிஜிரேட் இன்சுலேட் வேன் உள்ளது. அதில் இயற்கையாக பாதுகாக்கலாம். மீனவர்களும் இதை உறுதிபடுத்தியுள்ளனர். மக்களிடம் நம்பிக்கை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக உள்ளாட்சி துறை, உணவுத்துறை, மீன்வளத்துறை சார்பாக ரேண்டம் சேம்பில் எடுத்து காண்பிக்கப்பட்டது. இதன்மூலம் தரமான மீன் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. வெளி மாநிலத்தில் இருந்து வரும் மீன்களில் பார்மலின் கலந்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 21-07-2018

    21-07-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • DryingClothingfestival

    சீனாவில் வருடாந்திர உலர்த்தும் ஆடை திருவிழா: பாரம்பரிய ஆடைகளை நெய்து விழாவை சிறப்பித்த பெண்கள்

  • unmanedbookshopchina

    சீனாவின் அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய மிகப்பெரிய ஆளில்லா புத்தக நிலையம் திறப்பு

  • newyork_steam_explosion

    நீராவி குழாய் வெடித்து சிதறியதில் புகை மண்டலமாக காட்சியளித்த நியூயார்க் நகரம்!

  • Apollo11NeilArmstrong

    நீல் ஆம்ஸ்ட்ராங் சந்திரனின் மேற்பரப்பில் கால்பதித்த தினம் இன்று: அரிய புகைப்படங்களின் தொகுப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்