SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

பாமகவை கூட்டணிக்கு நாங்கள் அழைக்கவில்லை : தமிழிசை பேட்டி

2018-07-14@ 00:57:39

சென்னை: பாமக தலைவர் ராமதாசை, எங்கள் கூட்டணிக்கு நாங்கள் அழைக்கவில்லை என பாஜ மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார். தமிழக பாஜ தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், சென்னையில் இருந்து நேற்று காலை 6.30 மணிக்கு விமானம் மூலம் மதுரை புறப்பட்டு சென்றார்.
முன்னதாக அவர், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: பொருளாதார வளர்ச்சியில் பிரான்ஸ் நாட்டை பின்னுக்கு தள்ளிவிட்டு, இந்தியா 6வது இடத்துக்கு முன்னேறியுள்ளது. இதையெல்லாம் மறைப்பதற்காக காங்கிரசும், எதிர்க்கட்சியினரும் பொய் பிரசாரம் செய்கின்றனர்.

கடந்த 2014ம் ஆண்டு பாஜ தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி அமைக்கப்பட்டது. தற்போது எங்கள் கூட்டணியில் எந்த கட்சிகள் வேண்டுமானாலும் சேரலாம். பாஜ தலைமையில்தான், தேசிய ஜனநாயக கூட்டணி அமையும். அதில், புதிதாக எந்த கட்சிகளும், ஏற்கனவே இருந்து வெளியேறிய கட்சிகளும் வந்து இணையலாம். நாங்கள், எங்கள் கூட்டணியில் யார் வந்தாலும் ஏற்றுக்கொள்ள தயாராக இருக்கிறோம். தேர்தல் நெருங்கும்போது அதுபற்றி இறுதி முடிவு எடுக்கப்படும். பாமக தலைவர் ராமதாஸ், பாஜ கூட்டணியில் சேர மாட்டோம் என கூறியுள்ளார். நாங்கள், அவரை எங்களது கூட்டணிக்கு வரும்படி அழைக்கவில்லை. அதே நேரத்தில், அவர்கள் ஒன்றை மனதில் நினைக்க வேண்டும். இலங்கையில் லட்சக்கணக்கான தமிழர்கள், கொன்று குவிப்பதற்கு காரணமாக இருந்தது, காங்கிரஸ் கட்சி தலைமையில் நடந்த மத்திய ஆட்சிதான். அதை அவர்கள் மறக்க கூடாது. இவ்வாறு கூறினார்.

மேலும் செய்திகள்

மருத்துவம்

Medical Trends கைகளின் வலி
Like Us on Facebook Dinkaran Daily News
  • damagedvinayr_idoles00

    விநாயகர் சதுர்த்தியையடுத்து பல்வேறு பகுதிகளில் நீர் நிலைகளில் உடைந்து சிதறி கிடைக்கும் விநாயகர் சிலைகள் !

  • delhiaccid_childead

    டெல்லியில் கட்டடம் இடிந்து விபத்து : பெண் உட்பட 4 குழந்தைகள் பலி !

  • dogsketc_123amer

    பனிச்சறுக்கு விளையாடும் உலகின் முதல் நாய் : வியக்க வைத்த பென்னி !

  • thailandbirdsing

    தாய்லாந்தில் நடைபெற்ற பறவைகள் பாடும் போட்டி : ஆயிரக்கணக்கான பறவைகள் பங்கேற்பு

  • presimodhi_madhya123

    மத்தியப் பிரதேசத்தில் பாஜக நிர்வாகிகள் கூட்டம் : பிரதமர் மோடி, அமித்ஷா பங்கேற்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்