SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பேஸ்புக் மற்றும் வாட்ஸ் அப் மூலம் 60 நடிகைகள் பாலியல் தொழிலுக்கு அழைப்பு

2018-07-14@ 00:55:28

சென்னை: பேஸ்புக் மற்றும் வாட்ஸ் அப் மூலம் தொடர்பு கொண்டு 30 ஆயிரம் முதல் 3 லட்சம் வரை தருவதாக கூறி 60 நடிகைகளை பாலியல் தொழிலுக்கு அழைத்த 2 புரோக்கர்கைள விபச்சார தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர்.சென்னை அண்ணாநகர் பகுதியில் வசித்து வருபவர் நடிகை ஜெயலட்சுமி. இவர் கோரிபாளையம், விசாரணை, நேபாளி உள்ளிட்ட திரைப்படம் மற்றும் சின்னத்திரையிலும் நடித்து வருகிறார். இவர் கடந்த வாரம் போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதனை நேரில் சந்தித்து பரபரப்பு புகார் ஒன்று அளித்தார்.இந்த புகாரில்,  நான் கடந்த 10 ஆண்டுகளாக திரைத் துறையில் நடித்து வருகிறேன். கடந்த வாரம் எனது வாட்ஸ் அப்பில் ‘ரிலேசன்ஷிப் டேட்டிங் சர்வீஸ்’ என்ற பெயரில் ஒரு தகவல் வந்தது. அதை நான் முதலில் சாதாரணமாக நினைத்தேன். பின்னர் அதே எண்ணில் இருந்து 30 ஆயிரம் முதல் 3 லட்சம் வரை ஒரு இரவுக்கு ‘டேட்டிங் சர்வீஸ்’, உங்களுக்கு சம்மதமா? என தகவல் வந்திருந்தது. இதை பார்த்து அதிர்ச்சியடைந்தேன். மேலும், நீங்கள் சம்மதம் தெரிவித்தால் முக்கியமான விஐபிக்களுக்கும், அமைச்சர்களுக்கும், எம்எல்ஏக்களுக்கும் டேட்டிங் செல்லலாம். இதன் மூலம் ஒரு நாளைக்கு 30 ஆயிரம் முதல் 3 லட்சம் வரை நீங்கள் சம்பாதிக்கலாம். சம்மதம் இருந்தால் கீழே உள்ள எண்ணை தொடர்பு கொள்ளுங்கள் என கூறப்பட்டிருந்தது.

விசாரித்த போது பிரபலமான திரைப்பட நடிகைகள் முதல் சின்னத்திரை நடிககைகள் புகைபடங்களும் மற்றும் அவர்களுக்கு ஒரு மணி நேரம் முதல் 12 மணி நேரம் வரை எவ்வளவு விலை என்று நிர்ணயம் செய்து புகைப்படத்துடன் ஒரு குறுஞ்செய்தி அனுப்பினர். இதைபார்த்து நான் அதிர்ச்சி அடைந்தேன். எனவே இது குறித்து முழுமையாக விசாரணை நடத்தி சம்பந்தப்பட்ட நபர்களை உடனே கைது செய்ய வேண்டும். இவ்வாறு அந்த புகாரில் தெரிவித்திருந்தார்.புகாரின் படி, போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் இந்த வழக்கை விசாரிக்க விபசார தடுப்பு பிரிவு போலீசாருக்கு உத்தரவிட்டார்.அப்பொழுது, சென்னை விருகம்பாக்கத்தை சேர்ந்த கவியரசு மற்றும் முருகப்பெருமாள் ஆகியோர் பேஸ்புக் மூலம் 60 நடிகைகளின் செல்போன் எண்களை எடுத்து ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக வாட்ஸ் அப் மூலம், குறுஞ்செய்தி அனுப்பி விபசாரத்திற்கு அழைத்தது தெரியவந்தது. இதையடுத்து, இருவரையும் விபச்சார தடுப்பு பிரிவு போலீசார் ரகசியமாக கண்காணித்து வந்தனர். அப்போது கடந்த வாரம் விருகம்பாக்கத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் அழகிகளை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய போது அதிரடியாக போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

இதுகுறித்து ேபாலீசார் கூறியதாவது: பிடிபட்ட கவியரசு மற்றும் முருகப்பெருமாள் ஆகியோர் முதலில் வெளிமாநில அழகிகளை வைத்து ரகசியமாக பாலியல் தொழில் செய்து வந்தனர். அவர்களிடம் இளம் வாடிக்கையாளர் நடிகைகள் இருந்தால் சொல்லுங்கள் என்றும், நீங்கள் கேட்கும் பணத்தை தருகிறோம் என்று கூறியுள்ளனர்.  இதனால் இவருவரும் பணத்திற்கு ஆசைப்பட்டு பிரபல திரைப்பட நடிகைகள், சின்னத்திரை நடிகைகளில் தற்போது வாய்ப்பு குறைந்துள்ளவர்களின் பட்டியலை எடுத்து, அவர்களின் பேஸ்புக் பக்கத்தை ஆய்வு ெசய்து செல்போன் எண்களை எடுத்துள்ளனர். பிறகு சம்பந்தப்பட்ட நடிகைகளுக்கு நள்ளிரவு நேரத்தில் அவர்களின் செல்போன் எண்ணிற்கு குறுஞ்செய்தி அனுப்பி, நடிகைகளின் மன நிலையை அறிந்து கொள்வார்கள். குறுஞ்செய்திக்கு மறுப்பு தெரிவிக்காத நடிகைகளுக்கு விருப்பம் இருந்தால் டேட்டிங் மூலம் சில ஆயிரங்கள் முதல் லட்சக்கணக்கில் பணம் சம்பாதிக்கலாம் என ஆசை வார்த்தைகள் குறுஞ்செய்தி மூலம் தெரிவிப்பார்கள். பயப்பட வேண்டாம் அனைத்தும் ரகசியமாக காக்கப்படும் என்று உறுதியும் அளிப்பார்கள். இந்த தகவலின் படி தொடர்பு கொள்ளும் நடிகைகளை அவர்கள் தங்கள் வலையில் சிக்க வைத்து அதன் மூலம் பல லட்ச ரூபாய் சம்பாதித்து வந்துள்ளனர். இவர்கள் வசம் உள்ள நடிகைகளிடம் பிற நடிகைகளின் செல்போன் எண்களை பெற்று பாலியல் தொழிலுக்கு அழைப்பு விடுத்துள்ளனர். சில நடிகைகள் குறுஞ்செய்தியை பார்த்து மிரட்டியும் உள்ளனர்.

பின்னர் நாளடையில் தொழிலதிபர்கள் முதல் அரசியல் பிரமுகர்கள் வரை வாடிக்கையாளர்களாக தங்கள் வசம் வைத்து கொண்டனர். இந்த சம்பவம் அனைத்தும் நட்சத்திர ஓட்டலில் தான் நடந்து வந்துள்ளது. தனது அரசியல் பிரமுகர்கள் மூலம் எம்எல்ஏக்களை வாடிக்கையாளர்களாக பிடித்து தங்கள் தொழிலை பாதுகாப்புடன் விரிவு படுத்தியுள்ளனர். பிறகு வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை அதிகரித்ததால் “ரிலேசன்ஷிப் டேட்டிங் சர்வீஸ்” என்ற பெயரில் குரூப் உருவாக்கி அதன் மூலம் தங்கள் வாடிக்கையார்களுக்கு நடிகைகள் மூலம் வெளிமாநில அழகிகள் வரை புகைப்படத்துடன் ஒரு மணி நேரம் முதல் 12 மணி நேரம் வரை விலை நிர்ணயம் செய்து தகவல் அளித்து தொழில் நடத்தி வந்துள்ளனர். இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.

முன்னணி நடிகையுடன் இரவு தங்க தொழிலதிபரிடம் 40 லட்சம் பேரம்

பிடிபட்ட பாலியல் புரோக்கர்களிடம் வாடிக்கையாளராக உள்ள தொழிலதிபர் ஒருவர் முன்னணி நடிகர்களுடன் நடித்த பிரபல நடிகையுடன் ஒரு இரவு தங்கல் எவ்வளவு போக்கேஜ் என்று கேட்டுள்ளார். அதற்கு புரோக்கர்கள் 40 லட்சம் என்று கூறியுள்ளனர். அப்போது அந்த தொழிலதிபர் ஒரு இரவுக்கு 40 லட்சம் அதிகமாக இருக்கிறது. எனவே 1 லட்சம் தருவதாக கூறியுள்ளார். உடனே புரோக்கர்கள் அவரிடம் 1 லட்சத்திற்கு வேறு நடிகைகள் உள்ளனர். நாங்கள் படம் அனுப்புகிறோம் அதை பார்த்து தேர்ந்தெடுத்து சொல்லுங்கள் என்றும் பேரம் பேசியுள்ளனர். இதற்கான வாட்ஸ் அப் ஆதாரங்கள் கைது செய்யப்பட்ட நபர்களின் செல்போனில் இருந்து போலீசார் எடுத்துள்ளனர்.

பேக்கேஜ் முறையில் எம்எல்ஏக்களுக்கும் சப்ளை

கைது செய்யப்பட்ட பாலியல் புரோக்கர்களிடம் 20க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்கள் வாடிக்கையாளர்களாக இருந்துள்ளனர். இதனால் ஒவ்வொரு வாரமும் வியாழன் முதல் ஞாயிற்றுக்கிழமை வரை இரண்டு முதல் நான்கு நாட்கள் வரை பேக்கேஜ் முறையில் 2 லட்சம் முதல் 6 லட்சம் வரை பணத்தை கொடுத்துவிட்டு ஓட்டல்களில் உல்லாசம் அனுபவித்து வந்துள்ளனர். இதற்கான ஆதாரங்களும் செல்போன் உரையாடலும் கைது செய்யப்பட்ட கவியரசு மற்றும் முருகப்பெருமாள் ஆகியோரிடமிருந்து போலீசார் ஆதாரங்களை கைப்பற்றி உள்ளனர்.

விஐபிக்கள் மகன்கள் சிக்குவதால் விசாரிப்பதில் சிக்கல்

நடிகைகளை பாலியல் தொழிலுக்கு அழைத்த விவகாரத்தில் கைது செய்யப்பட்ட நபர்களிடம் இருந்து செல்போன், லேப்டாப்பை போலீசார் பறிமுதல் செய்து ஆய்வு செய்தனர். அப்போது இந்த சம்பவத்தில் தொழிலதிபர்கள் மற்றும் விஐபிக்கள் மகன்கள் நேரடியாக தொடர்பில் இருந்தது தெரியவந்தது. இதற்காக அவர்கள் முன்பணமாக பல லட்சங்கள் கொடுத்து வைத்து இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், பிடிபட்ட நபர்களின் வங்கி கணக்குகளை ஆய்வு செய்த போது அரசியல் கட்சி பிரமுகர்கள் நேரடியாக தொடர்பில் இருந்தது தெரியவந்தது.

தற்போது கைது செய்யப்பட்ட இருவரும் புரோக்கர்கள் தான். இந்த விவகாரத்தின் பின்னணியில் பிரபல நடிகைகள் இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் அவர்களை கைது செய்தால் தொழிலதிபர்கள் முதல் அரசியல் கட்சி பிரமுகர்கள் வரை கைது செய்யும் சூழல் உள்ளது. எனவே இந்த வழக்கை விபச்சார தடுப்பு பிரிவு போலீசார் இரண்டு புரோக்கர்களுடன் வழக்கை முடித்துள்ளதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • artexpo

  சென்னையில் ஓவியர் சீனிவாசலு நினைவாக கலானுபாவா ஓவிய கண்காட்சி

 • modimeetmaurico

  பிரதமர் மோடியுடன் அர்ஜென்டினா அதிபர் மவுரிசியோ மக்ரி சந்திப்பு : முக்கிய ஒப்பந்தங்கள் குறித்து பேச்சுவார்த்தை

 • Switzerlandhorse

  சுவிட்சர்லாந்தில் உற்சாகத்துடன் களைகட்டிய குளிர்கால ஹார்ஸ் ரேஸ் போட்டி

 • germanyrecord

  ஜெர்மனியில் கார்ட்டூன் கதாப்பாத்திரம் போன்று வேடமிட்டு 2,762 பேர் ஒரே இடத்தில் நடனமாடி சாதனை

 • omancyclerace

  ஓமனில் நடைபெற்ற உலக வாகையர் சைக்கிள் பந்தயத்தில் கஜகஸ்தான் வீரர் வெற்றி!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்