SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சென்னை அருகே முருகன் கோயிலில் 2 கோடி மரகத சிலை, தங்க வேல் கொள்ளை

2018-07-14@ 00:49:06

சென்னை: சென்னை அருகே முருகன் கோயிலில் 2 கோடி மதிப்பிலான மரகத சிலை மற்றும் தங்க வேல் ஆகியவை கொள்ளை போய் உள்ளது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. செங்குன்றம் அடுத்த அலமாதி கிராமத்தில் முருகன் கோயில் உள்ளது. இங்கு காலை, மாலை வேளைகளில் பூஜைகள் நடைபெறும். சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஏராளமானோர் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்துவிட்டு செல்வார்கள். ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி சிவகுமார் கோயிலை பராமரித்து வருகிறார். சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இக்கோயிலில் மூலவர் சிலையின் கால் பகுதிக்கு அருகில் 2 கோடி மதிப்பிலான ஒரு அடி உயரம் உள்ள மரகத முருகன்  சிலை, அதன் கையில் தங்க வேல் ஒன்று இருந்தது.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு அமாவாசை சிறப்பு வழிபாடு முடிந்ததும் கோயிலை பூட்டிவிட்டு சென்றனர். நேற்று காலை 7 மணியளவில் வழக்கம்போல் கோயிலில் பூஜைகள் நடத்தப்பட்டது. பக்தர்கள் அனைவரும் தரிசனம் செய்துவிட்டு, கலைந்து சென்றனர். காலை 8 மணிக்கு சிவகுமார் வந்து பார்த்தபோது, கோயிலில் இருந்த மரகத முருகன் சிலை, தங்க வேல் ஆகியவை மாயமானதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.  இதுகுறித்து சோழவரம் போலீசில் சிவகுமார் புகார் செய்தார். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரித்தனர். தகவலறிந்து மாவட்ட எஸ்பி சிபிசக்கரவர்த்தி, பொன்னேரி டிஎஸ்பி ராஜா சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு, விசாரணை மேற்கொண்டனர். மோப்ப நாய் ரேம்போ வரவழைக்கப்பட்டு ஒரு கி.மீ தூரம் ஓடியது. அது, யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. இதையடுத்து போலீசார், ‘‘இந்த சிலைகள் எப்படி கிடைத்தது, யாராவது நன்கொடையாக கொடுத்தார்களா?’’ என்பன உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை சிவகுமாரிடம் எழுப்பினர். ஆனால், சிவகுமார் அவர் முன்னுக்குப்பின் முரணாக பேசுவதாக தெரிகிறது. எனவே அவரிடம் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 23-05-2019

  23-05-2019 இன்றைய சிறப்பு பாடங்கள்

 • virat_koh11

  உலககோப்பை தொடரில் பங்கேற்க விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்து பயணம்

 • libya_sandai11

  தொடரும் உக்கிரமான தாக்குதல்கள் : லிபியாவில் ஆயுதக் குழுவினர் , அரசுப் படைகளுடன் கடும் துப்பாக்கிச் சண்டை

 • thuppaki-12jk

  13 பேரை காவு வாங்கிய தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு : ஓராண்டு நினைவலைகளை ஏந்தும் தமிழகம்

 • hurricane_12

  அமெரிக்காவை கலங்கடித்த தொடர் சூறாவளித் தாக்குதல் : மழை,வெள்ளத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்