SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Satya Summer Offer

இன்று பணி துவக்குகிறார் அசாமின் முதல் திருநங்கை நீதிபதி

2018-07-14@ 00:48:55

கவுகாத்தி: அசாமின் முதல் திருநங்கை நீதிபதியான ஸ்வாதி பிதான் ராய் இன்று தனது பணியை தொடங்க உள்ளார்.காம்ரூப் மாவட்ட மற்றும் செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதியாக திருநங்கை ஸ்வாதி பிதான் ராய் நியமிக்கப்பட்டுள்ளார். இன்று நடக்கும் லோக் அதாலத்தில் அவர் முதல் முறையாக நீதிபதியாக தனது பணியை தொடங்க உள்ளார். இது குறித்து ஸ்வாதி பிதான் ராய் கூறுகையில், ‘‘எனது நியமனம், திருநங்கைகளுக்கு எதிரான பாகுபாட்டை களைவதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தும்.

திருநங்கைகளின் தகுதியையும், திறமையையும் அங்கீகரிக்க வேண்டும். கண்ணியமான வாழ்க்கை வாழ்வதற்கான வாய்ப்பை அவர்களுக்கு ஏற்படுத்தி தர வேண்டும். திருநங்கைகளுக்கு எதிரான நிலுவையில் உள்ள பல வழக்குகள் இனி தீர்த்து வைக்கப்படும்’’ என்றார்.மேற்கு வங்கம், மகாராஷ்டிராவை தொடர்ந்து நீதிபதியாகும் 3வது திருநங்கை என்ற பெருமையை ஸ்வாதி பெற்றுள்ளார்.


மேலும் செய்திகள்

Satya Summer Offer
Like Us on Facebook Dinkaran Daily News
  • mylai_kabal1

    பங்குனி உத்திர திருவிழா : மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் தேரோட்டம் கோலாகலம்

  • parade_eye1

    புனித பாட்ரிக் தினம் :காணுமிடமெல்லாம் பசுமையை குறிக்கும் பச்சைநிற ஆடையுடன் அணிவகுப்பு

  • newattack

    நியூசிலாந்து மசூதியில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் பரிதாபமாக 8 இந்தியர்கள் பலி

  • siva_muthu12

    காரைக்குடி முத்துமாரியம்மன் கோவில் திருவிழா! : ஏராளமான பக்தர்கள் பால்குடங்களுடன் ஊர்வலம்

  • manohar_cm12

    கோவா முதல்வர் மனோகர் பாரிக்கரின் உடலுக்கு அரசியல் பிரமுகர்கள், பொதுமக்கள் அஞ்சலி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்