SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நான் போலி பகுத்தறிவுவாதியா? தமிழிசைக்கு கமல் பதிலடி

2018-07-14@ 00:48:07

சென்னை: நான் போலி பகுத்தறிவுவாதி என தமிழக பாஜ தலைவர் தமிழிசை கூறியுள்ளார். என்னை போலி என கூறுவதற்கு, அவருக்கு உரிமை இல்லை என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கூறினார்.மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், கொச்சியில் இருந்து விமானம் மூலம் நேற்று மாலை 5.30 மணிக்கு சென்னை வந்தார். அப்போது அவர், சென்னை விமான நிலையத்தில் பேட்டி.அம்மாவசை நல்ல நேரம் பார்த்து நான் கட்சியின் கொடியை ஏற்றிவைத்து அறிமுகம் செய்தேன். எனவே நான் போலி பகுத்தறிவாதி என தமிழக பாஜ தலைவர் தமிழிசை கூறியுள்ளார். என்னை போலி என கூறுவதற்கு, தமிழிசைக்கு உரிமை இல்லை.நான் பகுத்தறிவுவாதிதான். என்னிடம் இருக்கும் அனைவருமே, பகுத்தறிவாளிகள் இல்லை. என் அமைப்பில் பல்வேறு மதத்தை சேர்ந்தவர்கள் உள்ளனர். பல்வேறு நம்பிக்கை உள்ளவர்களும் இருக்கிறார்கள். என் வீட்டில், எனது மகள்கூட பகுத்தறிவுவாதி இல்லை.

நான் கட்சி தொடங்கி இருப்பது, பகுத்தறிவு கொள்கையை பரப்பி, மூட நம்பிக்கையை ஒழிப்பதற்கு மட்டும் அல்ல. நான் அரசியலுக்கு வந்தது ஏழ்மையை ஒழிப்பதற்கும், ஊழலை ஒழிப்பதற்கும்தான். அதற்கு அனைவரின் உதவியும் எனக்கு தேவை.நேற்று நடந்த கூட்டத்தில் என்னை ஆழ்வார்பேட்டை ஆண்டவரே என்று கோஷமிட்டனர். அது சர்ச்சையானதுதான். இனி அதுபோன்ற சம்பவம் நடக்காது என நான் வாக்குறுதி அளிக்கிறேன். சட்டமன்ற தேர்தல், நாடாளுமன்ற தேர்தல் ஒரே குவியலாக இருக்க கூடாது. சத்துணவு முட்டை விவகாரத்தில் தவறு நடக்கிறது என நான் ஓராண்டுக்கு முன்னதாகவே கூறினேன். அப்போது அப்படி ஒன்றுமே இல்லை. அது பொய் குற்றச்சாட்டு. எங்கே நிரூப்பிக்க சொல்லுங்கள் என மார்தட்டி சவால் விட்டவர்கள் மீண்டும் அதே குற்றச்சாட்டில் மாட்டியுள்ளனர். லோக்பால் மசோதாவில் நிறைய தண்ணீர்தான் இருக்கிறது. பாலை காணவில்லை. அதை சரி செய்வதற்கு, தண்ணீரில் மீண்டும் பாலை சேர்க்க கூடாது. பால் பாலாகவே இருக்க வேண்டும்.

கோவையில் ஒரு மாணவி, பேரிடர் மேலாண்மை பயிற்சி எடுக்கும்போது, உயிரிழந்த விவகாரம் கண்டிக்கத்தக்க ஒரு செயல். அப்படி குழந்தைகளுக்கு ஆபத்தான ஒரு விளையாட்டை, அந்த கல்வி நிறுவனமே செய்திருப்பது ஒரு அட்டையான, ஆபத்தான செயல். கல்வி நிறுவனங்களின் மாடிகள் மட்டும் உயரமாக இருந்தால் போதாது. கல்வியின் தரமும், நடத்தையும் உயரமாக இருக்க வேண்டும்.அமித்ஷா வருகைக்கு பிறகு, தமிழகம் தேர்தல் களமாக மாறிவிட்டது. மத்தியில் மீண்டும் பாஜ ஆட்சி ஏற்படும். தமிழகத்திலும் தாமரை மலரும் என கூறுகின்றனர். ஆனால் தமிழகத்தில் தாமரை மலரும். ஆனால், எந்த தாமரையை சொல்கிறார்கள் என எனக்கு தெரியாது. இவ்வாறு அவர் கூறினார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • lisbon_tramp11

  லிஸ்பனில் டிராம் ரயில் தடம் புரண்டு விபத்து : 28 பேர் காயம்

 • 15-12-2018

  15-12-2018 இன்றைய சிறப்பு படங்கள்

 • AmazonIllegalMining

  அமேசான் மழைக்காடுகளில் தங்கம் எடுக்க சட்டவிரோதமாக தோண்டப்படும் சுரங்கங்கள்..: போலீசார் தீவிர சோதனை

 • chinasnowfall

  கடும் பனிப்பொழிவால் வெண் போர்வை போர்த்தியது போல காணப்படும் சீனாவின் கண்கவர் புகைப்படங்கள்

 • hungary_policepadhuga11

  புதிய தொழிலாளர் சட்டத்தை அமல்படுத்தியதை கண்டித்து ஆயிரக்கணக்கான ஹங்கேரியர்கள் போராட்டம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்