SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் எதிரொலி அதிமுக எம்பிக்கள் கூட்டம் நாளை மறுதினம் நடக்கிறது

2018-07-14@ 00:43:39

சென்னை: நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் வருகிற 18ம் தேதி தொடங்குகிறது. இதையொட்டி அதிமுக எம்பிக்கள் கூட்டம் இபிஎஸ், ஓபிஎஸ் தலைமையில் நாளை மறுதினம் சென்னையில் நடக்கிறது. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் வருகிற 18ம் தேதி முதல் நடக்கிறது. இந்த கூட்டத்தில் அதிமுக எம்பிக்கள் எப்படி செயல்பட வேண்டும் என்பது குறித்த ஆலோசனை சென்னை, ராயப்பேட்டையில் உள்ள அதிமுக கட்சி அலுவலகத்தில் வருகிற திங்கள் (நாளை மறுதினம்) மாலை 4 மணிக்கு நடக்கிறது. கூட்டத்துக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தலைமை தாங்குகிறார்கள். இதில் மாநிலங்களவை, மக்களவை அதிமுக எம்பிக்கள் அனைவரும் பங்கேற்பார்கள். கூட்டத்தில், நாடாளுமன்ற கூட்டத்தின்போது மத்திய அரசின் திட்டங்களுக்கு அதிமுக தொடர்ந்து ஆதரவு கொடுப்பது பற்றி முக்கிய ஆலோசனை நடத்தப்படலாம் என்று கூறப்படுகிறது. காரணம், 2019ம் ஆண்டு ஏப்ரல் மாதம் நாடாளுமன்றத்துக்கு பொதுத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தற்போது நடைபெறும் இந்த கூட்டம் முக்கியத்துவம் பெறுகிறது.

எம்பிக்கள் கூட்டம் முடிந்ததும், நாளை மறுதினம் மாலை 5 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடக்கிறது. ஜெயலலிதா பொதுச்செயலாளராக இருக்கும்போது அதிமுகவில் ஒன்றரை கோடி உறுப்பினர்கள் இருப்பதாக கூறப்பட்டது. ஆனால், தற்போது அதிமுக உறுப்பினர் புதுப்பித்தல் மற்றும் சேர்க்கை என இரண்டையும் சேர்த்து மொத்தம் 85 லட்சம் விண்ணப்பங்களே வந்துள்ளதாக கூறப்படுகிறது. அதனால் நாளை மறுதினம் நடைபெறும் கூட்டத்தில், அதிமுக உறுப்பினர் சேர்க்கை மற்றும் புதுப்பித்தல் பணிகளை வேகப்படுத்துவது குறித்தும் ஆலோசிக்கப்படுகிறது. அதேபோன்று, அதிமுக செயற்குழுவை விரைவில் கூட்டுவது குறித்தும் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்று அதிமுக மூத்த நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்

மருத்துவம்

Medical Trends கைகளின் வலி
Like Us on Facebook Dinkaran Daily News
  • damagedvinayr_idoles00

    விநாயகர் சதுர்த்தியையடுத்து பல்வேறு பகுதிகளில் நீர் நிலைகளில் உடைந்து சிதறி கிடைக்கும் விநாயகர் சிலைகள் !

  • delhiaccid_childead

    டெல்லியில் கட்டடம் இடிந்து விபத்து : பெண் உட்பட 4 குழந்தைகள் பலி !

  • dogsketc_123amer

    பனிச்சறுக்கு விளையாடும் உலகின் முதல் நாய் : வியக்க வைத்த பென்னி !

  • thailandbirdsing

    தாய்லாந்தில் நடைபெற்ற பறவைகள் பாடும் போட்டி : ஆயிரக்கணக்கான பறவைகள் பங்கேற்பு

  • presimodhi_madhya123

    மத்தியப் பிரதேசத்தில் பாஜக நிர்வாகிகள் கூட்டம் : பிரதமர் மோடி, அமித்ஷா பங்கேற்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்