SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

ஏடிஎம்மை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி : கல்லூரி மாணவனை கைது செய்து போலீசார் தீவிர விசாரணை

2018-07-13@ 21:11:43

சென்னை:  சென்னை ராயப்பேட்டை பாரதி சாலை அருகே உள்ள அமீர் மஹால் எதிரே ஐசிஐசிஐ வங்கியின் ஏடிஎம் மையம் உள்ளது. இந்த ஏடிஎம் மையத்திற்குள் புகுந்து இன்று அதிகாலை வாலிபர் ஒருவர் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்துள்ளார். அப்போது மும்பையில் உள்ள ஐசிஐசிஐ வங்கியின் கட்டுப்பாட்டு அறையில் உள்ள அலாரம் ஒலித்ததுள்ளது.

உடனே வங்கி கட்டுப்பாட்டு அறையில் இருந்த வங்கி ஊழியர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலின் பேரில் அவர்கள் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்து ஏடிஎம் இயந்திரத்தை யாரே உடைப்பதாக தகவல் தெரிவித்தனர்.தகவலின் படி, அண்ணாசாலை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அப்போது வாலிபர் ஒருவர் இருப்பு கம்பியால் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து பணத்தை கொள்ளையடிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தார்.
உடனே போலீசார் இந்த வாலிபரை சுற்றி வளைத்து பிடித்தனர். அவரிடம் இருந்து இரும்பு கம்பியும் பறிமுதல் ெசய்யப்பட்டது. போலீசார் விரைந்து செயல்பட்டதால் பல லட்சம் ரூபாய் பணம் தப்பியது.பின்னர் பிடிபட்ட வாலிபரை போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று தீவிர விசாரணை நடத்தினர். அப்போது அவர் ராயப்பேட்டை ஜானிகான் தெருவை சேர்ந்த ஷேக் சுலைமான் பாஷா(20) என்பதும், அவர் தனியார் கலைக்கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பி.எஸ்சி கம்பியூட்டர் சயின்ஸ் படித்து வருவதும் தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் பிடிபட்ட கல்லூரி மாணவனிடம் தொடர்ந்து விசாரணை நடத்தினர். இந்த நிலையில் இன்று காலை தியாகராயநகர் வெங்கட் நாராயண சாலையில் உள்ள தமிழ்நாடு மெர்கண்டைனல் வங்கி ஏடிஎம்யை அதிகாலையில் உடைத்து கொள்ளை அடிக்க முயற்சி நடந்திருப்பதாக அதன் மேலாளர் மாம்பலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.புகாரின் அடிப்படையில் போலீசார் அந்த ஏடிஎம்மில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளில் பதிவான பதிவுகளை வைத்து விசாரணை செய்த போது, அந்த காட்சிகளில் பதிவான புகைபடம், ராயப்பேட்டை ஐசிஐசிஐ வங்கியில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட மாணவன் போல் இருந்தது. அதனைத்தொடரந்து மாம்பலம் போலீசார் அண்ணாசதுக்கம் சென்று விசாரணை நடத்திய போது மெர்கன்டனைல் வங்கியிலும் அந்த மாணவன் தான் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டது தெரியவந்தது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • muharamfest

  நாடு முழுவதும் இஸ்லாமியர்களின் மொஹரம் பண்டிகை இன்று கொண்டாடப்பட்டது

 • nasaevanaktrump

  அமெரிக்காவில் உள்ள நாசாவின் ஜான்சன் விண்வெளி ஆய்வு மையத்தை பார்வையிட்ட இவாங்கா டிரம்ப்

 • florence&trumph

  பிளோரென்ஸ் புயலால் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய அமெரிக்க அதிபர் டிரம்ப்

 • greenlandicemelt

  கிரீன்லாந்தில் வெப்பமயமாதலால் உருகும் பனிப்பாறைகள் : கடல் நீர்மட்டம் உயரும் அபாயம்

 • thirupathilast

  திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவ திருவிழா : சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் நிறைவு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்